"எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" என்ற பழ மொழிக்கு உதாரணமாக இந்திய அரசு நடத்தி வரும் பல நிறுவனங்களில் முதலிடம் வகிப்பது Air India.கடந்த இருபது நாட்களாக இந்த நிறுவன pilot-கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதில் இந்தியாவிலிருந்து நியூ யார்க், சிகாகோ, லண்டன் மற்றும் பல வெளிநாடு செல்லும் விமான சேவையும் அடங்கும். இதனால் தினமும் பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு மற்றும் ஏகப்பட்ட நஷ்டம். புதிதாக வாங்க உள்ள Dream Liner விமான பயிற்சிக்கு Air India வை சேர்ந்த பைலெட்களுக்குதான் முன்னுரிமை தரவேண்டும், merge செய்யப்பட்ட Indian நிறுவன பைலெட்களுக்கு அல்ல என்பதுதான் பிரச்சனை.
இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒதிக்கி வைத்து விட்டு, முதலில் அடிப்படை விஷயத்திற்கு வருவோம்.எத்தனையோ கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில் Rs.42,570 கோடி ரூபாய் கடனிலும், Rs. 22,000 கோடி ரூபாய் நஷ்டத்திலும் ( கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை சுகாதார வசதிகளுக்கு செலவழித்ததை விட இரு மடங்கு தொகை இது..!!!)
இந்த நிறுவனத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? நம் மனதில் எழும் கேள்விகள் இவைதான்,
1.வேறு தனியார் யாருமே நடத்த விரும்பாமல், தயாராக இல்லாமல் இந்த நிறுவனத்தை அரசு நடத்துகிறதா?
2.அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற தண்ணீர், மின்சாரம், கல்வி,மருத்துவம் போல இதுவும் அத்தியாவசியமான ஒன்றா?
3.ISRO (Indain Space Research Organisation) போல செலவு பிடிக்கும் அதே சமயம் ரகசியங்கள் நிறைந்த துறையா?
4.கோடானு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் எத்தனை பேருக்கு இதனால் பயன்?
இதைப் பற்றி எதையும் யோசிக்காமல் மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய எப்படி முடிகிறது? இதற்கு தனியாக மத்திய அரசில் ஒரு துறை, அதற்கு ஒரு அமைச்சர், அந்த துறையில் பல ஆயிரம் பேருக்கு வேலை, கடைசியில் ஒவ்வொரு வருஷமும் பல கோடி நஷ்டக் கணக்கு.
இன்றைய உலக பொருளாதார நிலையில், பெட்ரோல் விலை தாறு மாறாக எகிறும் சூழ்நிலையில், மிகவும் கடினமான போட்டி நிறைந்த Air Line Travel தொழிலில்,அதுவும் சிங்கபூர் Air Lines போன்ற ஜாம்பவான்களே தடுமாறும்போது இந்திய அரசு தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவதை பார்க்கும் போது அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று வரும் பயணிகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் IT மற்றும் அதை சார்ந்த தொழில் செய்பவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் அதிகம் வாழும் நகரங்கள் என்றால் பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத். இன்று வரை இந்த நகரங்களில் இருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை Air India-வால் இயக்கப் படுவதில்லை. மும்பை அல்லது நியூ டெல்லி சென்று அங்கு பல மணி நேரம் காத்திருந்து வேறு விமானம் பிடிக்க வேண்டும். அதே சமயம் Air France, Lufthansa , British Airways போன்றவை இந்த நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை செய்கின்றன.
ஆகஸ்ட் 2011-ல் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சட்டம் இயற்றியது, அதன்படி அமெரிக்காவுக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர விபரம், தாமதமானால் அதன் விபரம், டிக்கெட் வரி விபரம், பயணிகள் எத்தனை பெட்டிகள் எடுத்து வரலாம், அதன் எடை, நீள அகலம போன்ற விபரங்களை பயணிகளுக்கு மிக தெளிவாக அந்தந்த விமான நிறுவனத்தின் Web Site-ல் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும், தவறினால் $80,000 அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் 2012 மே மாதம் 5 ஆம் தேதி $80,000 (Rs. 43,20,000) அபராதம் விதிக்கப்பட்ட ஒரே ஒரு விமான நிறுவனம் Air India மட்டுமே. அதுவும் திடீரென அபராதம் விதிக்கப்படவில்லை, சில பல warrnings கொடுத்து அதை சற்றும் சட்டை செய்யாமல் இருந்த பின்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணம் எங்கிருந்து வரப்போகிறது? இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்துதானே?
சரி என்ன செய்வது.. சூப்பர் ஸ்டார் டயலாக்கை சொல்லி முடிக்க வேண்டியதுதான்
"ஆண்டவனே வந்தாலும் Air India வை காப்பாத்த முடியாது..!!!"
இந்த பிரச்சனையால் மற்ற தனியார் நிறுவனங்கள் கட்டணத்தைக்கூட்டி விட்டன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். King Fisherம் பிரச்சனையில். இதனால் ஜெட்டும் இண்டிகோவும் கட்டணத்தை இஉஷ்டப்படி ஏற்றுகின்றனர்
ReplyDeleteஸலாம் சகோ.சிவதி,
ReplyDeleteபல புதிய அரிய தகவல்களை அறிய தந்திருக்கிறீர்கள்..! படிக்க படிக்க கோபமும் ஆற்றாமையும் நிரம்புகிறது. இறுதியில் ஏதும் செய்ய முடியாத நம் நிலை கண்டு... மனதுக்கு மிகவும் கவலையாக உள்ளது. நஷ்டப்படுவது நாம் (மக்கள்) அல்லவா..?
ரொம்ப சிம்பிள்ளா புரியற மாதிரி எழுதி இருக்கேங்க..
ReplyDelete