Friday, February 10, 2012

பலாப்பழம்

சென்ற வாரம் சிகாகோ போயிருந்தேன். வழக்கம் போல Devon Street க்கு போய்..
( Devon Street பற்றி தெரிந்தவர்கள் கீழ் பத்தியை skip செய்யலாம்.)

Devon Street:
சிகாகோ-வில் இந்திய மளிகை, காய், நகை, துணி , சாப்பாட்டு கடைகள் நிறைந்த ,  இந்தியாவை போலவே honk  செய்துகொண்டு, குறுக்கும் நெடுக்கும் road-ல் கிராஸ்செய்துகொண்டு, எதிர் வரும் இந்தியர்களை முறைத்துக்கொண்டு, parking lot கிடைக்காமல் அலைந்துகொண்டு அல்லல் மற்றும் அவஸ்தை படும் இடம் தான் Devon Street என்று மிகவும் பிரபலமாக சிகாகோ- வில் அழைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இடத்தில்தான் என் மனைவி எப்போதும் grocery shopping செய்வது வழக்கம், ஏனென்றால் காரைப் பார்க் செய்ய அவஸ்தை பட  போவது நான்தானே, ஒரு வழியாய் காரை கிடைத்த தம்மா துண்டு இடத்தில 
ஒரு மார்கமாக சொதப்பல் Parallel Parking செய்துவிட்டு Pattel Brothers கடைக்குள் நுழைத்தேன்.என்னை முதலில் வரவேற்றது அறுத்து வைத்திருந்த பலாப்பழம். பார்த்தவுடன் மனது சிகாகோ வில் இருந்து நேராக தஞ்சை பூக்கார தெரு காய் கறி மார்க்கெட்க்கு சென்றது. 

 ஒவ்வொரு summer  விடுமுறையும் எனக்கு தஞ்சாவூர் தான் கதி..!! பாட்டி வீட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்,  அங்கு சித்தப்பா, அவர்  பையன்கள், மாமா , சித்தி எல்லோரும் பெரும் கூட்டமாக கோடை விடுமுறையை கழிப்போம். காலை எழுந்தவுடன் கப்பல் சித்தப்பா ( கப்பலில் வேலை பார்த்ததால் வந்த காரணப் பெயர்) காய் வாங்க பூக்கார தெரு கிளம்பிவிடுவார். சில சமயம் நானும் அவருடன் சைக்கிளில் போவேன். அவர் மார்க்கெட் உள்ளே நுழைந்தவுடன் நேராக பலாப்பழம் மலை மலையக குவித்து வைத்திருக்கும் இடத்துக்கு போவார், வாசனை பிடிப்பார்,  தூக்கி பார்ப்பார் , பேரம் பேசுவார் "அட விருந்தாளி எல்லாம் வந்திருக்கு முடிச் சூடுமையா"  ன்னு சொல்லி ஒரு வழியாக வாங்கி சைக்கிள் கேரியரில் கட்டி கிளம்புவோம். 

   பலாப்பழம் சைக்கிள் கேரியரில் போவதை பார்பதற்கு எதோ ஒரு பெரிய பச்சை கலர் பாறாங்கல் போவது போல இருக்கும். தொட்டு பார்த்தால் குத்தும் , ஆனால் அந்த வலியும் இதமாக இருக்கும்.  வீட்டுக்கு வந்ததும் நேராக கொல்லைபுறத்திற்கு பலாப்பழம் கொண்டு போகப்படும். பெரிய மாமா நல்லெண்ணெய் கிண்ணம், பெரிய கத்தி சகிதம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து " எலே.. அந்த பலாப்பழத்தை இங்கன உரிட்டிக்கிட்டு வா.. "  என்பார். சொல்லும் தோரணையிலேயே அவர்தான் பலாப்பழம் உரிப்பதில் expert என்பது தெரியம்.சின்னஞ் சிறுசுகள் நாங்கள் சுற்றி உட்கார்ந்திருக்க வெகு லாகவகமாக உரிக்க ஆரம்பிப்பார்.பலாப்பழ பால் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக்கொள்ளவார்.  " ராஜா.. சித்திகிட்ட போய் பலா கொட்டை வைக்க முறம் வாங்கிகிட்டு வா .." ,"  இத கொண்டுபோய் குப்பையில போடு "   என்று அவர் தரும் சின்ன சின்ன வேலைகளுக்காக காத்திருப்பேன்.  
மிக நேர்த்தியாக பலாச்சுளை தனியாக, கொட்டை தனியாக பிரித்து வைத்துவிடுவார். சித்தி முறத்தை எடுத்துக் கொண்டு போய் வெய்யிலில் பலா கொட்டையை காய வைப்பார், அந்த பலா கொட்டையை பார்த்தாலே எரிச்சலாக வரும், பின்ன..அடுத்த 3 நாள் முருங்கக்காய், பலா கொட்டை, மாங்காய் போட்ட சாம்பார் தான் fixed menu. "ரொம்ப சாப்பிடாதிங்க.. வயித்த வலிக்கும்.." சித்தியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல் பலாச்சுளையை  சும்மா உட்டு ரவுண்டு கட்டிட்டு அப்பறமா அவஸ்தை படுவோம்.  

Back To Chicago:
 விலை என்ன? ஏது என்று எதையும் பார்க்காமல் அந்த வெட்டி வைத்திருந்த சின்ன பலாப்பழத் துண்டை ஷாப்பிங் கார்டனில் எடுத்து வைத்தேன். Check Out counter ல் ஸ்கேன் பன்னும் போது அந்த சின்ன பலாப்பழத் துண்டின் விலை $9.85 என்று காட்டியது. என் மனைவியின் அக்னி பார்வையை சந்திக்க திராணியட்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பெரிய மாமாவை போல " அந்த  நல்லெண்ணெய் கிண்ணத்தையும், பெரிய கத்தியையும் எடுத்து வை..week end  பலா கொட்டை சாம்பார்.. " என்று மனைவிக்கு கட்டளை இட " ஆமாம்.. இந்த micro size பலாப்பழத்துக்கு ஆடம்பரம் வேற.. அப்படியே பிச்சி சாப்பிடுங்க.."  என்று பதில் வந்தது. வேறு வழியின்றி "Product of Brazil"  என்ற sticker-ய் எடுத்துவிட்டு முதல் பலாச் சுளையை சுவைத்தேன். அனேகமாக 6 , 7  ஆண்டுகளுக்கு பிறகு நான் சாப்பிடும் முதல் சுளை,கடைசியாக இந்தியாவில் சாப்பிட்டது. செறுப்பு வாரை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது போல இருந்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பெரும் அவஸ்தை.. face reaction னில்  இருந்தே என் மனைவிக்கு புரிந்து விட்டது. இரண்டு சுளைகளை கஸ்டப்பட்டு முழுங்கினேன் , மேற்கொண்டு திண்றால் 911 க்கு call பண்ண வேண்டி வரும் என்பதால் trash-ல்  போட்டுவிட்டு Good Bye.. சொன்னேன். மீண்டும் ஒரு power full அக்னி பார்வை என் மனைவியிடமிருந்து பரிசாக கிடைத்தது.

ஒரு வாரம் கழித்து சித்தியிடம் Phone-ல் பேசிக்கொண்டிருந்தேன், தஞ்சாவூரில் சொந்தத்தில் நடந்த கல்யாணம் கருமாதி செய்திகளை சொல்லிவிட்டு கடைசியாக சொன்னார்கள், "கொல்லப்பக்கம் வச்ச பலா மரம் பிஞ்சி வச்சிருக்கு இன்னும் 2  மாசத்தில பலாப்பழம் சாப்பிடலாம்..ஊருக்கு வரியா ராஜா ? "  

Flight Ticket பார்த்துக் கொண்டிருக்கிறேன், எந்த travel agent நல்ல deal தருகிறான் என்று தெரியுமா?








4 comments:

  1. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பெரும் அவஸ்தை.. face reaction னில் இருந்தே என் மனைவிக்கு புரிந்து விட்டது. இரண்டு சுளைகளை கஸ்டப்பட்டு முழுங்கினேன் , மேற்கொண்டு திண்றால் 911 க்கு call பண்ண வேண்டி வரும் என்பதால் trash-ல் போட்டுவிட்டு Good Bye.. சொன்னேன். மீண்டும் ஒரு power full அக்னி பார்வை என் மனைவியிடமிருந்து பரிசாக கிடைத்தது.

    பலாபழம் என்றால் இவ்வளவு கஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ..!! அந்த கஷ்டம் தான் இதை எழுத வைத்தது..

      Delete
  2. ஹி..ஹி...ஹி,...பலா பழத்துல இவ்ளோ விஷயம் இருக்கா..? ரொம்ப நல்லா இருக்கு...எளிய வார்த்தை பிரயோகம் அருமை...

    ReplyDelete
  3. நன்றி நண்பரே..உற்சாகம் தருகிறது உங்களுடைய comment.

    ReplyDelete