Friday, March 16, 2012

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.!!

முன்குறிப்பு :
இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.
இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி 
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி.  ???


இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!!  ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!!  As a Indian.. you should learn our national language.. "  என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia  வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.
விக்கிபீடியா சொல்லும் உண்மை 

அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language  ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language  தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5  மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் )  ஹிந்தியை அந்த மாநில Official Language  ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5  மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication
மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.  இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின்  Official Language  இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது.  ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம். 


சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்   பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 வழக்கின் விபரம்:
 " இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது  தண்டனைக்குரியது..!!"


வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி  என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".


  இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:


Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi


The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித்  தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.


இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .."  நிறையபேர்  ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.

இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.

24 comments:

  1. varalaarai thavaraaga purindhukolvadhu mattrum thavaraaga puriyavaippadhu indhiyargalukku kaivandha kalai
    nandri
    surendran

    ReplyDelete
    Replies
    1. Yes.. After so many years now only I came to know the truth. Thanks to internet and Wikipedia.

      Delete
  2. பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" எனும் கொள்கை ஆவணத்தில் "இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை" என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கீழே உள்ள அந்த ஆவண இணைப்பில் - 7 ஆம் பக்கத்தில் காண்க:

    http://thepmk.in/wp-content/uploads/2012/01/New-Politics-New-Hope-PMK-Policy-Draft-Date-1.2.2012.pdf

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருள்..!! பா.ம.க வின் மீது எனக்கு பெரிய மதிப்பு இல்லை என்றாலும், இந்த விஷயத்தில் பா.ம.க வின் பணி பாராட்டுக்குரியது, பசுமை தாயகம் மூலம் பிரதிநிதிகளை ஐ.நா. வுக்கு அனுப்புவதையும் சேர்த்துதான் சொல்கின்றேன்.தவறாக பள்ளிகளில் இதுபோல சொல்லித்தருவதை தடை செய்யவேண்டும்.

      Delete
    2. நன்றி அருள்..!! பா.ம.க வின் மீது எனக்கு பெரிய மதிப்பு இல்லை
      //

      குசும்பு சார் உமக்கு...!!

      Delete
  3. நன்று ...அப்படின்னா....நம்ம இந்தியா வோட தேசிய மொழி எது...?

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவுக்கென்று தேசிய மொழி கிடையாது ..None.

      Delete
  4. சீக்கிரமே இந்தியாவின் தேசிய மொழியாக சீனம் ஆகிவிடும். நம் அரசியல்வாதிகளே அதற்கான ஆப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது காஷ்மீரில் சீனா சாலை போட்டுக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்து அணு உலைக்கும் ரஷ்யாவைத் தொடர்ந்து இப்போது சீனாவும் நிதியுதவி செய்யப் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்பொது அமெரிகாவிலேயே பல பள்ளிகளில் சீன பாடத்தை விருப்பப் பாடமாக படிக்கலாம்.அதற்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது, காரணம் வரும் காலங்களில் சீனா பொருளாதாரத்தில் Number-1 ஆகா மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை..

      Delete
  5. Bull shit posting.
    We all have to accept one language as national language.
    Hindi is accepted by all except Tamils.
    What is your bloody problem in that ???????????????

    ReplyDelete
    Replies
    1. So, you mean to say Gujarat High Court, Constitution of India and Wikipedia all are Bull Shit..????

      Delete
  6. forget thirukkural....accept bhagvad gita
    forget tamil.....accept sanskrit...
    forget abt tamilians.....think abt (h)indians
    forget eelam tamis...think abt kashmiri pandits..
    forget e.v ramasamy......accept sankaracharyaas...
    forget u r human....think which community u belong to!
    forget foot ball...play cricket (so that u can avoid physical contact with lower caste people)
    forget dalits.......accept brahmins..
    (if u follow the above...god will come down to kiss ur ass)

    ReplyDelete
  7. இவனுங்களுக்கெல்லாம் (தமிழ்பற்று வியாபாரிகளுக்குதான்) வெள்ளைக்காரனோட "இங்க்லீஷ்" இங்கே இருக்கலாம்..ஆனால் நமது நாட்டு ஹிந்தி இருக்கக்கூடாதாம்..இன்னும் இவனுங்க அடிமைதனத்திலிருந்து மாறவில்லை....ஹிந்திய இந்தியாவோட மொழின்னு ஒத்துக்கொண்டால்தான் என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா கூமுட்ட ஒனக்கு மண்டைல ஏதாச்சும் இருக்கா தெருவுல போற வர்றவனெல்லாமே கிறுக்கன் நீ மட்டும் ஐன்ஸ்டீனா ? ஏண்டா வெண்ண ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியில்லன்னா அது அடிமைத்தனமா ?
      //ஹிந்திய இந்தியாவோட மொழின்னு ஒத்துக்கொண்டால்தான் என்ன?// இல்லைனு யாரு சொன்னா ? தேசிய மொழி இல்லன்னுதான சொல்றோம் ?

      நல்ல சைக்கோ டாக்டரா பாருடா முதல்ல மரியாதையா பேசக் கத்துக்க.

      சிவதி தங்கள் பதிவுக்கும் பின்னூட்டத்தில் பதிலளி & அனானி வசதி வைத்ததற்கும் நன்றி

      Delete
    2. உண்மை தான் சார். தமிழகத்தில் தமிழ்பற்று வியாபாரிகள் பெருகிவிட்டனர்.

      Delete
  8. Whether the Tamil idiots agree or not ....Hindi is our national language...No doubt about it!(Come on! We will join the big queue to get U.S permanent residency where there is no reservation policy.As a conservative Hindu It's hard for me to live in a Christian country...But We will offer prayer to our Hindu god by making BEEF STEAK instead of PRASAADHAM!)

    ReplyDelete
    Replies
    1. Mr. Brahmin chauvinist the case is not filed in idiot tamil nadu it ur greatest Gujarath only. gujarath high court only judged as nowhere mentioned in the constitution as Hindi is India's national language

      Delete
  9. மாங்கா மண்டை மர்மயோகி....இந்தி என்பது இந்தியாவில் பேசப்படும் மொழி இல்லை என்று யாரும் கூறவில்லை. அதே இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி, மலையாளம் என்று பல மொழிகள் உள்ளன. நேற்று வந்த ஹிந்தி தேசிய மொழியா? அந்த மொழிக்கு என்ன சிறப்புகள் உள்ளன?

    ReplyDelete
    Replies
    1. தல விடுங்க அவனொரு கிறுக்குப் பய பதிவுக்கும் அவன் உளறியதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அவனோட ப்லாக்க படிச்சு பாருங்க அவனொரு சைக்கோன்னு புரியும்

      Delete
  10. Very good post Rajan. I agree with your comments for the most part. I still believe that politics should not have had its hand (read Dmk) in learning a "popular" language like Hindi in Tamilnadu schools. I come from Pondy where Learning French was encouraged. As such importance should be given to Tamil; Learning other languages should be entertained too.
    Murali.

    ReplyDelete
  11. Yes Murali. . I agree with you. Nothing is wrong in learning hindi,it's wonderful to learn new language,but people are assuming that Hindi is our national language,and I am trying to prove that is not true.

    ReplyDelete
  12. அருமையான பதிவு.மூளை சலவை செய்யப்பட்ட சைக்கோக்கள் தான் ஹிந்தியை தேசிய மொழி என கூவுகின்றன.

    ReplyDelete
  13. Great and that i have a super provide: Whole House Renovation Checklist Pdf residential renovation contractors near me

    ReplyDelete