Sunday, February 19, 2012

குடலராஜா -2

மெக்சிகோ என்றதும் என்னுடைய குரல் நடுங்க ஆரம்பித்தது.


" எப்போது போகவேண்டும்?" மெதுவாக கேட்டேன்.

"திங்கள் காலை கிளம்பவேண்டும் .. Steve நல்லா ஸ்பானிஷ் பேசுவான். So உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.."   என்று என் மேனேஜர் பேசிக் கொண்டிருக்க எனக்கு ஏதோ அடிவயத்தில் பிசைவதை போல இருந்தது.

"உனக்கு மெக்சிகோ போவது OK  தானே?  Are you comfortable in travelling to Mexico? "
என்று திடீரென்று கேட்டார். என் குரல் நடுக்கத்தில் இருந்து கண்டுபிடித்தாரா ?அல்லது அவருக்கே தோன்றியதா தெரியவில்லை

"Actually..  நம்ப Sales Team Manager  ஏற்கனவே மெக்சிகோ போயிருக்கார் , அவர் சொன்னதை கேட்டால் ரொம்ப பயமா இருக்கு.. GUN  எல்லாம் தேவைப்படும் போல, இதுவரைக்கும் நான் சினிமாலதான் GUN  பார்த்திருக்கேன்..."
என்று நான் புலம்ப ஆரம்பிக்க

" அட.. நம்ப Sales Team மேனேஜர் Michelle  George தான.. அவன் சும்மா கதை விடுவான், ஒன்னுன்னா .. பத்துன்பான் , அவன் சொல்றதெல்லாம் நம்பிக்கிட்டு. அவன் party ல் சொல்ற கதையெல்லாம் கேட்டுட்டு சும்மா சிரிச்சுட்டு போயிடனும் , அதெல்லாம் serious ஆக எடுத்துக்க கூடாது..!!"
என்று என் கவலையை அலட்சியம் செய்ததோடு ,

"நான் hotel , client  details  எல்லாம் e-mail  அனுப்புறேன்,  Flight Ticket  book  பண்ணிடு..!!"  என்று மெக்சிகோ உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

நான் உடனே Steve  க்கு phone செய்து மெக்சிகோ assignment  பற்றி பேசினேன். அவன் செம cool  ஆக,

"  மெக்சிகோவில் ஒரு பயமும் இல்ல..Sales Team Manager  சொல்றதெல்லாம்  நம்பாதே,  அவன் சும்மா ஒன்னுன்னா .. பத்துன்பான்,  அவன் எப்பயோ..மெக்சிகோ போனதை வச்சு சும்மா கதை விடறான்..எனக்கு நல்லா ஸ்பானிஷ் தெரியும், ரொம்ப easy  யாக manage  பண்ணிடலாம்"
என்று என் மேனேஜர் போலவே பேசினான்.

"நீ முன்னால மெக்சிகோ போயிருக்கியா..? என்றேன்.

"இல்ல .. இதுதான் முதல் trip..!!, I am very excited to go over there.."  என்றான்.

வேறு வழி இன்றி Flight Ticket  மற்றும் Hotel  Room book  செய்தேன்.  அட்லாண்டாவில் ஸ்டீவ் என்னுடன் சேர்ந்துகொள்வதாக திட்டம்.

திங்கள் காலை 6 மணிக்கு flight, ஞாயிற்று கிழமை மதியம் என் மேனேஜரிடம்
இருந்து phone  வந்தது,

" ஒரு முக்கியமான செய்தி.. ஸ்டீவ் ராஜினாமா செய்து விட்டான்,  personnel  problem... அவனோட மனைவி divorce  notice  அனுப்பியிருக்கிறாள்., so.."  என்று இழுத்தார்.

நானும் " So..."  என்று இழுத்தேன்.

"நீ தனியாக   மெக்சிகோவிற்கு போகவேண்டும், இந்த சமயத்தில் வேறு வழியில்லை,  நான் வரலாம் என்று பார்த்தேன் , But  எனக்கு இன்னொரு முக்கியமான meeting  இருக்கிறது.  குட் லக் ,  Have a safe trip..!!"   என்று வாழ்த்தி  phone -ய் வைத்து விட்டார்.

ஞாயிறு இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டேன், கனவில் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் வருவது போல தோன்றியது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்பினேன்.  Grand  Rapids - இல் Flight  பிடித்து பின் அட்லாண்டாவில் மெக்சிகோ Connecting flight பிடித்தேன்.    

  பக்கத்துக்கு சீட்டில் ஒரு சிடு மூஞ்சி தாத்தா உட்கார்ந்திருந்தார், வந்தவுடன்  ஹெட் போன்ய் மாட்டிக் கொண்டு எதையோ கேட்க ஆரம்பித்து விட்டார். நடுவில் Rest Room  போய் வந்தேன். அப்போது என் சீட்டில் ஒரு print  செய்யப்பட்ட துண்டு பேப்பர் இருந்தது, எடுத்து பார்த்தேன்,

Jesus Saves You..!!  என்று கொட்டை எழுத்தில் print   செய்யப்பட்டிருந்தது.
அடுத்த பக்கத்தை பார்த்தேன் My friend, you must realize you are a sinner,  for all have sinned.. என்று தொடங்கியது அந்த பிரசுரம். இந்த தாத்தா வைத்திருப்பாரோ என்று அவரை பார்த்தேன். மெலிதாக புன்னகைத்து விட்டு மீண்டும் பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டார். எதற்கும் இருக்கட்டும் என்று "Jesus Saves You.."  paper -ஐ மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  

" இன்னும் அரை மணி நேரத்தில் மெக்சிகோ சிட்டியை அடைந்து விடுவோம், மிகவும் அருமையான தட்ப வெப்ப நிலை .. 70F , clear  sky , Aero Mexico  வை  தேர்ந்தெடுத்தற்கு நன்றி..!!"   என்று pilot  அறிவித்தார்.

சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் விமானம் மெக்சிகோ சிட்டியில் தரை இறங்கியது. Immigration, custom  clearance  முடித்துவிட்டு சுமார் $200 ய்  மெக்சி க்கன் peso  வாக மாற்றிக்கொண்டு ஏர்போர்ட் வெளியே வந்தேன். வருசையாக  Taxi கள் நின்று கொண்டிருந்தன.

" Avoid golden with maroon color Taxis, choose white with yellow stripe taxis.. they are safe"   என்று என் மேனேஜர் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது.

 வெள்ளை கலரில் மஞ்சள் கோடு போட்ட taxi  இல் ஏறினேன்.  ஹோட்டல் அட்ரஸ்ய் காண்பித்தேன். Taxi  கிளம்பியது,  கொஞ்ச நேரத்தில் டிரைவர் radio வில் யாரையோ கூப்பிட்டு ஸ்பானிஷ்ல் பேசினான் , எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் தஞ்சை புன்னைய நல்லூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த   "Jesus Saves You.."  paper- யை  அழுத்தி பிடித்துக்கொண்டேன். Taxi  சென்னை T-Nagarல் இருக்கும் சந்துக்கள் போன்ற ஒரு குறுகிய தெருவில் நுழைந்தது ..

( தொடரும் ..)  







  




6 comments:

  1. //குடலராஜா//

    க்வடலரஹா?

    ReplyDelete
    Replies
    1. சரியாக யூகித்து விட்டீர்கள் , செம smart தான் நீங்கள்..!! இதற்கான விளக்கம் பின்வரும் தொடர்களில்..

      Delete
  2. சீக்கிரம்.....அப்புறம்....?வோர்ட் verification நீக்குங்க ...

    ReplyDelete
  3. நண்பரே .. உங்கள் விருப்பப்படி word verification gone..!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அடுத்து? வேகம் தொடருங்கள் :)

    ReplyDelete