Sunday, April 15, 2012

ஷாருக்கானும் -இராமேஸ்வரம் மீனவனும்

நாம் இப்போது ஷாருக்கானுக்கும் -இராமேஸ்வரம் மீனவனுக்கும் ஒரு ஒப்பீடு செய்யப்போகிறோம், அதாவது ஒற்றுமை வேற்றுமைகளை காணப்  போகின்றோம். இது என்ன முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சி? என்று நீங்கள் நினைக்கலாம், தொடர்ந்து படித்தால் புரியும்..


 ஷாருக்கான்:
இவர் ஒரு இந்திய குடிமகன். பிரபலமான திரைப்பட நடிகர், செல்வந்தர்.
இவர் நேற்று தனி விமானத்தில் இந்தியாவிலிருந்து நியூ யார்க் அருகில் உள்ள White Field விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார், அவரை குடியுரிமை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து விசாரணை செய்கிறார்கள், இறுதியில் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படுகிறார். இதே போல அவருக்கு முன்னொரு முறை 2009 இல் நடந்துள்ளது என்றாலும்ஷாருக்கான் அடிக்கடி அமெரிக்காவிற்கு படபிடிப்பிற்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வந்து போய் கொண்டுதான் இருக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இந்திய அரசாங்கம் மிகுந்த கவலையும் கோபமும் கொண்டது, ஒரு இந்திய குடிமகனுக்கு நிகழ்ந்த அவமானமாக கருதியது. இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் கிருஷ்ணா ரஷ்யாவிலிருந்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் , வாஷிங்டன்னிலிருந்து இந்திய தூதர் நிருபமா ராவ் ஒரு படி மேலே சென்று அமெரிக்க அரசாங்கத்தின் விளக்கம் கேட்டு கண்டனத்தை தெரிவித்தார். இறுதில் அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கோரியது.அதை ஏற்றுகொண்ட இந்திய அரசு இது போல இனிமேல் நிகழாவண்ணம் இருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசை அறிவுறித்தியது.தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியதே ..!!


இராமேஸ்வரம் மீனவன்:

இவரும் ஒரு இந்திய குடி மகன். செல்வந்தர் அல்ல, தினசரி சாப்பாட்டிற்காக கடலில் மீன் பிடிப்பவர்.


இவரும் இவரை சேர்ந்த சொந்தங்களும் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உடனே இவர் இலங்கை கடற் படையால் சுட்டுக்கொள்ளபடுகின்றார்.இறந்த உடலோடு கரை திரும்பும் இவரது சொந்தங்கள் அழுகிறார்கள், அவரது மனைவியும் குழந்தைகளும் பிணத்தின் மேல் விழுந்து துடிக்கிறார்கள். மீனவர் சமூகம் நீதி கேட்டு போராடுகிறது.


தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசு, தனது குடி மகன் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டாலே கொதித்து எழும் இந்திய அரசு இராமேஸ்வரத்தில் நடப்பவை வேறு ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல மவுனம் சாதிக்கிறது. நாடாளு மன்றத்தில் இந்த பிரச்சனையை MP -க்கள் பேசும் போது விளக்கம் அளித்த கிருஷ்ணா " மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து விட்டார்கள் , அதனால் இலங்கை கடற் படை சுட்டு விட்டது " என்று விளக்கம் அளிக்கின்றார். இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் விளக்கமும் கேட்கப் படவில்லை.


வேற்று நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மும்பை நகர மக்களை இஷ்டம் போல சுட்டுக் கொன்றான்,அப்படிப்பட்ட தீவிரவாதியையே உயிரோடு பிடித்து இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் அத்து மீறி எல்லைக்குள் நுழைந்து விட்டார்கள் அதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று இந்திய அரசு இந்திய மீனவன் இறப்பிற்கு விளக்கம் அளிக்கிறது, இலங்கை அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை , இந்திய அரசு எந்த ஒரு விளக்கமும் கேட்டவில்லை.


வழக்கம் போல சினிமா, கிரிக்கெட் மற்றும் மலிவான அரசியல் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக, இந்திய ஊடகங்கள் மீனவன் இறந்த செய்திக்கும் அதற்கான இந்திய அரசின் ஜீரோ நடவடிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.


இப்படி தனது குடிமகன்களில், ஒருவர் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கொதித்து எழுந்தும் இன்னொருவர் சுடப்பட்டு இறந்த பின்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்ன நியாயம்? எப்படி இந்திய ஒருமைப் பாட்டின் மீதும் இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வரும்?
ஒருவேளை அந்நிய அரசால் சுட்டுக் கொல்லப்படும் நபர் பிரபலமான நடிகராகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ அல்லது வாய் சவடால் விடும் அரசியல் வாதியாகவோ இருந்தால் தான் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமோ ?





Tuesday, April 3, 2012

டூல் பாக்ஸ்

அந்த screw  வை கழட்டுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது, என் பையனுக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டு காரை அதனுடைய packing இல் இருந்து கழட்டும் முயற்சியில் இருந்தேன். என் மகன் பொறுமை இழந்து கொண்டிருந்தான், அந்த காரை உடனே எடுத்து விளையாட துடித்தான். Laptop bag  இல் வைத்திருக்கும் tool box ஞாபகம் வந்தது, எடுத்து வந்து சரியான screw driver -யை உபயோகித்து உடனே கழட்டிவிட்டேன்.


"You are genius dad..!! "   அமெரிக்க முறைப்படி என்னைப் பாராட்டிவிட்டு மகன் காருடன் விளையாட போய்விட்டான். அந்த சின்ன அழகான tool box யை பார்க்கும் போதெல்லாம் எனக்கு Jeff  ஞாபகம்தான் வரும்.

நானும் Jeff இம் ஒரே ஆபீசில் ஒரே department இல் வேலை பார்த்தாலும் எனக்கு அவரை நன்றாக தெரிய ஆரம்பித்தது ஒரே project இல் இரண்டு பேரும் வேலை பார்க்க ஆரம்பித்த போதுதான்.நல்ல ஆஜானு பாகுவான உடல் வாகு, நான் அவர் பக்கத்தில் நிற்கும் போது குள்ளமாக குட்டிப்பையனாக இருப்பதுபோல உணர்வேன்.நானும் அவரும் project installation -க்காக கொலம்பஸ் போக வேண்டியிருந்தது, கிட்டத்தட்ட 5 மணி நேர கார் பயணம். அவர் drive செய்ய நான் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.

"  you want boring drive or interesting drive..? "   என்றார் Jeff.

" Off course .. interesting drive.." என்றேன் நான்.

உடனே free way  இல் இருந்து வெளியேறி கிராமங்களின் வழியாக செல்லும் பாதையில் செல்ல ஆரம்பித்தார். சின்ன சின்ன கிராமங்கள் வந்து செல்ல பச்சை பசுமையான வயல்களும் அழகான மரங்களும் பார்க்க ரம்மியமாக இருந்தது. எப்போதும் Free way  இல் டிரைவ் செய்து பழக்கப்பட்ட எனக்கு இது வித்தியாசமாக இருந்தது. சாலை ஓரமாக தர்பூசணி விற்கும் இடத்தில் நிறுத்தி தர்பூசணி சாப்பிட்டோம்.

அவருக்கு மிகவும் பிடித்த தொலைக் காட்சி சேனல் Food Network என்றார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறந்த restaurants தனக்கு அத்துப்படி என்றும் மதிய உணவு சாப்பிட போகும் ஊரை முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.

" எந்த ஊரில் சாப்பிட போகிறோம், சொல்லு பார்க்கலாம்? "  Jeff கேட்டார்.

"தெரியலையே..!! "என்றேன்.

" மிக மிக பிரபலமான ஒருவர் அந்த ஊரில் பிறந்தவர்.."  Jeff  clue கொடுத்து கண்டுபிடிக்க சொன்னார்.


கொலம்பஸ் போகும் வழியில் இன்னும் 2 மணி நேரத்தில் வரப்போகும் ஊரில் பிறந்த மிக மிக பிரபலமானவர் யார்?

"Foot ball , basket ball or base ball player..? "

"இல்லை .., சினிமா ,அரசியலும் கிடையாது .."
மிக தெளிவாக எனது அடுத்த யூகத்துக்கும் பதில் சொன்னார். நாமெல்லாம் மண்டையை குடைந்து யோசிப்பது எப்போதும் நேர விரயம் என்பதை என்றைக்கோ உணர்ந்து விட்ட நான்,


"தெரியல.. நீங்களே .. சொல்லுங்கள் .." என்றேன்.


" Wapakoneta.. Neil Armstrong -ன் சொந்த ஊர், அவர் பிறந்த ஊர்.." என்றார்.

"வபகொனிடா.. வாயில நுழைய ரொம்ப கஷ்டம்.." என்றேன்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து வபகொனிடாவை அடைந்தோம். நீல் ஆம்ஸ்ட்ராங் அமைத்திருந்த museum க்கு எதிர்புறம் இருந்த restaurant -ல் சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.நீல்ஆம்ஸ்ட்ராங்யை மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் அந்த museum -ல் பார்க்கலாம், அவர் கையொப்பம் இட்டு தருவார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.மதியம் மூன்று மணி போல கொலம்பஸ்யை அடைந்தோம், நேராக client site -க்கு சென்று வேலையை ஆரம்பித்தோம். எங்களுடைய computer server install செய்யப்பட்டிருக்கும் அறைக்கு சென்று பார்த்தோம்.Server சரியாக rack -ல் install செய்யப்படாமல் இருந்தது, சில screw க்கள் tight செய்யப்படாமல் loose ஆக இருந்தன. நான் கையால் அவற்றை tight செய்ய முயற்சித்தேன்.

"Wait.. don't struggle.." என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை எடுத்து சரியான screw driver யை எடுத்து வேலையை வெகு கச்சிதமாகவும் சீக்கிரமாகவும் முடித்தார் Jeff.

"எப்போதும் ஒரு compact டூல் பாக்ஸ்யை கை வசம் வைத்திருக்க வேண்டும்.." என்றார்.

" அமேரிக்கா வந்த பின்புதான் இந்த மாதிரியான வித விதமான டூல்ஸ் எல்லாம் பார்க்கிறேன்.. இந்தியாவில் சாதாரண fuse போனால் கூட ஆளை கூப் பிட்டு மாற்றுவோம்.." என்றேன்.


அன்று வேலை முடிந்து கிளம்பும்போது மணி இரவு ஏழு ஆகிவிட்டது.

"ஒரு நல்ல restaurant பார்த்து வைத்திருக்கிறேன், Travel சேனலில் காண்பித்து இருக்கிறார்கள்..நேராக அங்கு போய் டின்னெர்யை முடித்துவிடலாம்.."
என்று சொல்லி அந்த restaurant -ன் சிறப்புகளை சொன்னார். அவர் சொல்ல சொல்ல எனக்கு என்னவோ அது ஒத்து வரும் என்று தோன்றவில்லை.அந்தrestaurant   உள்ளே நுழைந்தோம்.
  
ஒரு முழு மாட்டின் தொடை, ஒரு முழு பன்றி மற்றும் இன்னும் பிற மாமிச சமாச்சாரங்கள் ஒரு நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருக்க அதன் கீழே தீ ஜுவாலை திகு திகு வென எரிந்து கொண்டிருந்தது. Jeff  ஒரு தட்டை எடுத்துக் கொண்டு நேராக தீயில் வெந்துகொண்டிருக்கும் பன்றியிடம் போனார், அங்கு நிற்பவனிடம் ஏதோ சொல்ல அவன் அந்த பன்றியின் உடலில் இருந்து ஒரு சின்ன துண்டை வெட்டி அவரது தட்டில் வைத்தான், அதே போல மாட்டின் தொடையும். நான் அங்கு சாப்பிட்டது வெறும் French Fries மட்டும்தான். ஆனால் Jeff  நன்றாக விரும்பி சாப்பிட்டார். அங்கிருந்து வெளியே வந்ததும் நேராக
இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். இது ஐஸ் கிரீம்க்கு மிகவும் popular இடம் என்று சொன்னார். இப்படியாக அடுத்த 3 நாட்களும் வித விதமான இடத்தில் சென்று சாப்பிட்டோம்.கடைசியாக ஊருக்கு திரும்பி வரும்போது சற்று குண்டா கியிருந்தேன்.


அடுத்த வாரம் திங்ககிழமை மதியம் lunch time போல Jeff  என்னிடம் வந்தார்.

"Grand  Rapids -ல் புதுசா ஒரு restaurant திறந்து இருக்கான்,வரியா சாப்பிட போலாம்?" என்றார்.

" இல்லை ..Jeff..நீங்க போயிட்டு வாங்க.. எனக்கு வேற வேலை இருக்கு.." என்றேன்.அவர் மட்டும் தனியாக போனார்.

இரண்டு நாள் கழித்து office வந்தவுடன் என்னுடைய மேனேஜர் என்னுடன் தனியாக பேசவேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
 
" திங்ககிழமை மதியம் லஞ்ச் சாப்பிடJeff போயிருக்கார்.. அவரால சாப்பாட்டை சரியாய் முழுங்க முடியல..டாக்டர் கிட்ட போயிருக்கார்.. செக் பண்ணிட்டு அவருடைய தொண்டையிலிருந்து வயித்துக்கு போற குழாயில் கான்செர் வந்திருப்பதை கண்டுபிடுச்சிருக்காங்க..இப்ப hospital லதான் இருக்கார்"
என்ற அதிர்ச்சியை கொடுத்தார்.
    
சாயங்காலம் Jeff யை பார்க்க போனேன். படுத்து கொண்டு Food Network channel பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தார்.


"Cancer advanced stage -ல் இருக்கு. நாளைக்கு ஹீமோ தெரபி செய்ய போறாங்க.. என்னால எதையும் சாப்பிட முடியல.. liquid  food தான்.."  Jeff  சொல்ல சொல்ல என்னால் தாங்க முடியவில்லை.

நான்கு நாட்கள் கழித்து எங்கள் manger அனைவரையும் meeting -க்கு அழைத்தார்.


" Jeff .. நேற்று இரவு இறந்து விட்டார்..மதியம் உடலை அடக்கம் செய்கிறார்கள்.. நாம் எல்லோரும் செல்கிறோம்.." என்றார்.


எல்லோரும் Jeff -ன் இறுதி சடங்கிற்கு சென்று வந்தோம். மனது பாரமாக இருந்தது. மறு நாள் வழக்கம்போல office -க்கு போனேன். என் மேனேஜர் என்னிடம் வந்தார்,


"Jeff மனைவியிடம் இருந்து e-mail  வந்தது, இதை உன்னிடம் Jeff  கொடுக்கச்  சொன்னாரம்.."
என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை என்னிடம் நீட்டினார்.