முன்குறிப்பு :
இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.
இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி :ஹிந்தி. ???
இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!! ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!! As a Indian.. you should learn our national language.. " என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.
அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language ஆகும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) ஹிந்தியை அந்த மாநில Official Language ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication
மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின் Official Language இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.
இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப் பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கின் விபரம்:
" இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..!!"
வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".
இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:
Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi
The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece
உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித் தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .." நிறையபேர் ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.
இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.

இந்தியாவின் தேசிய மொழி :

விக்கிபீடியா சொல்லும் உண்மை |