Friday, February 24, 2012

கற்றதும் விற்றதும்

அந்த பெரிய அலுமினியப் பறவை LAX  (லாஸ் ஏஞ்சல்ஸ்)    ஏர்போர்ட்டில்இறங்கியபோது தேதி அக்டோபர் 4 - 1996 , நேரம் மதியம் 1.30  மணி . முதன் முதலாக அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்கிறேன்.  Immigration  மற்றும் customs -இல் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன். Taxi  பிடித்து செல்ல வேண்டிய ஹோட்டல் அட்ரஸ் கொடுத்தேன்.என்னை ஏற்றிக்கொண்டு taxi ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தது. என் கண்ணில் பட்ட முதல் பெரிய விளம்பரம் " Live Nude Girls - 24 hours open" .  மனதிற்குள் ஒரு குறு குறுப்பு ,  ஆஹா..!!  அருமையான ஊருக்குத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.  Taxi, 405 North  freeway -இல் வேகமாக போய் கொண்டிருந்தது , முதல் முதலாக ஏழு எட்டு lane  கொண்ட ரோடை பார்க்கின்றேன். மனது முழுவதும் ஒரே பரவசம் , எதையோ சாதித்துவிட்டது போல ஒரு எண்ணம். சுமார் 45  நிமிட பயணத்திற்கு பின் நான் தங்க வேண்டிய ஹோட்டல் வந்தது.

luggage  உடன் உள்ளே சென்று reception - இல் பேரை சொன்னேன். கொட கொடவென்று கீ போர்டில் தட்டும் சப்தம் கேட்டது, அதன் பின் 

" Sorry.. no reservation  in your name."  பதில் வந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரே ஒரு phone number க்கு எப்படி phone செய்வது என்று தெரியாமல்  விழித்தேன். ஒரு வழியாக receptionist உதவியுடன் phone  செய்யும் போதுதான் தெரிந்தது அது ஆபீஸ் நம்பர் என்றும், சனி கிழமை யாரும் இருக்கமாட்டார்கள் என்பதும். மறுபடியும் பேந்த பேந்த  விழித்தேன். ஒரு குருட்டு தைரியத்தில் என் passport -யை receptionist  இடம் கொடுத்து மீண்டும் ஒரு முறை room reservation யை செக் பண்ண சொன்னேன். மீண்டும் கொட கொடவென்று கீ போர்டை தட்டும் சப்தம் கேட்டது

"ohh.. ok, you have a reservation. you should have told your last name instead of first name..!!"

கற்றது # 1:
  அமெரிக்காவில் முதலில் உங்கள் last name  யை சொல்ல வேண்டும். ]

அதன் பின் என்னை புன்சிரிப்புடன் வரவேற்று, சில பல இடங்களில் கையொப்பம் வாங்கிக்கொண்டு ரூம் சாவி கொடுக்கப்பட்டது. அப்பாடா என்று ரூமில் வந்து விழுந்தேன். சிறுது நேரத்தில் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்க ரூம் சர்வீஸ்ல் ஆர்டர் பண்ணலாம் என்று menu  வை எடுத்து பார்த்தேன். ஒரு மண்ணும் புரியாததால் direct  ஆக phone  பண்ணி கேட்போம் என்று phone செய்தேன்.


" ஹலோ.. I want a vegetarian burger"  இது நான்.


"sorry.. I am not understanding you.. "   இது எதிர் முனை.


I want a vegetarian burger.."  மறுபடியும் நான்.

"I am having difficulty to understand you.. can you talk little slow please.."   இது எதிர் முனை.

slow வாக பேசவும் என்பதை தப்பாக புரிந்து கொண்டு , கிசு கிசு குரலில் நான்,


ஹலோ.. I...  want...  a...  vegetarian..... burgerrrrr...."

" I am really sorry.. your ascend is too strong..."  இது எதிர் முனை.

என்ன எழவுடா இது , பசிக்கு ஒரு burger order  செய்ய முடியலையே என்ற ஆதங்கத்தில் சத்தமாக

" I want a vegetarian burger.."  என்றேன்.

"டொக்..."  என்று மறுமுனையில் disconnect செய்யும் சப்தம் கேட்டது.


கற்றது # 2:
  Phone  இல் பேசும் போது கத்தாமல் தெளிவாக நிறுத்தி நிதானமாக பேசவேண்டும், குறிப்பாக எதிர் முனையில் பேசுபவர் புரியவில்லை என்று தெளிவாக சொல்லும்போது.]


இது கதைக்கு ஆகாது என்று நினைத்து வெளியில் போய் சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன். ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன், எதிர்ப்புறமே "Baja Mexican Grill"  என்ற போர்டை பார்த்து உள்ளே நுழைந்தேன். அழகான ஒரு teen age girl  புன்னகையுடன் என்னை வரவேற்றாள்,


" ஹாய்.. "  இது அவள் 


"ஹாய்.." இது நான். 


" to go or here..?"  இது அவள்.

 என்ன இது வந்தவுடன் GO -ன்னு சொல்றா.. ஒன்னும் புரியலையே என்ற குழப்பத்தில்

"sorry..."   இது நான்.

" to go or here..?"  மறுபடியும் அவள். 

"  I am not understanding, what you are asking.." இது நான்.

இதற்குள் என் பின்னால் நான்கு ஐந்து பேர் queue வில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து லேசாக எரிச்சல் தென்பட தொடங்கியது.

"Do you want to eat here... or you want to take it out.."   இது அவள்.

அப்பாடா இதைத்தான் கேட்கிறாளா..உடனே நான்

" பார்சல்...."  என்றேன்

" Sorry ... tell me what you want to eat..? "  இது அவள்.

அங்கிருந்த மெனு போர்டை பார்த்து vegetarian item  ஒன்று தென்படவும்

"நம்பர் 7 "  என்றேன்.

அவளுக்கு நான் பார்சல் என்று சொன்னது புரிந்ததா?, இல்லை அவளே முடிவு செய்தாளா?  எனக்கு தெரியாது.  ஆனால் வேக வேகமாக நான் order செய்த item த்தை pack  செய்து என் கையில் திணித்து என்னை வெகு விரைவாக அந்த இடத்திலிருந்து துரத்தி விட்டாள். போகும் பொது அந்த queue வில் நிற்பவர்கள் எல்லாம் என்னையே ஒரு மாதிரியாக பார்ப்பது போல தோன்றியது..  

  [ கற்றது # 3:
  அமெரிக்காவில் சாப்பாட்டு கடையில் பார்சல் என்று சொல்லக் கூடாது, அதற்கு பதிலாக To Go  என்று சொல்ல வேண்டும்.]
 

இந்த வாரம் கற்றதைக் கண்டோம், அடுத்த வாரம் விற்றதைக் காண்போம்..!!
  
 நன்றி : அமரர் சுஜாதா --> "அலுமினியப் பறவை" மற்றும் "கற்றதும் பெ(வி)ற்றதும்" தலைப்பிற்கு.

1 comment:

  1. பின்னிட்டிங்க போங்க. நல்ல அறிவுரை பாஸ்.

    ReplyDelete