Friday, February 24, 2012

கற்றதும் விற்றதும்

அந்த பெரிய அலுமினியப் பறவை LAX  (லாஸ் ஏஞ்சல்ஸ்)    ஏர்போர்ட்டில்இறங்கியபோது தேதி அக்டோபர் 4 - 1996 , நேரம் மதியம் 1.30  மணி . முதன் முதலாக அமெரிக்காவில் காலடி எடுத்து வைக்கிறேன்.  Immigration  மற்றும் customs -இல் ஒரு பிரச்சனையும் இல்லாமல் வெளியே வந்தேன். Taxi  பிடித்து செல்ல வேண்டிய ஹோட்டல் அட்ரஸ் கொடுத்தேன்.என்னை ஏற்றிக்கொண்டு taxi ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தது. என் கண்ணில் பட்ட முதல் பெரிய விளம்பரம் " Live Nude Girls - 24 hours open" .  மனதிற்குள் ஒரு குறு குறுப்பு ,  ஆஹா..!!  அருமையான ஊருக்குத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன்.  Taxi, 405 North  freeway -இல் வேகமாக போய் கொண்டிருந்தது , முதல் முதலாக ஏழு எட்டு lane  கொண்ட ரோடை பார்க்கின்றேன். மனது முழுவதும் ஒரே பரவசம் , எதையோ சாதித்துவிட்டது போல ஒரு எண்ணம். சுமார் 45  நிமிட பயணத்திற்கு பின் நான் தங்க வேண்டிய ஹோட்டல் வந்தது.

luggage  உடன் உள்ளே சென்று reception - இல் பேரை சொன்னேன். கொட கொடவென்று கீ போர்டில் தட்டும் சப்தம் கேட்டது, அதன் பின் 

" Sorry.. no reservation  in your name."  பதில் வந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தேன். எனக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரே ஒரு phone number க்கு எப்படி phone செய்வது என்று தெரியாமல்  விழித்தேன். ஒரு வழியாக receptionist உதவியுடன் phone  செய்யும் போதுதான் தெரிந்தது அது ஆபீஸ் நம்பர் என்றும், சனி கிழமை யாரும் இருக்கமாட்டார்கள் என்பதும். மறுபடியும் பேந்த பேந்த  விழித்தேன். ஒரு குருட்டு தைரியத்தில் என் passport -யை receptionist  இடம் கொடுத்து மீண்டும் ஒரு முறை room reservation யை செக் பண்ண சொன்னேன். மீண்டும் கொட கொடவென்று கீ போர்டை தட்டும் சப்தம் கேட்டது

"ohh.. ok, you have a reservation. you should have told your last name instead of first name..!!"

கற்றது # 1:
  அமெரிக்காவில் முதலில் உங்கள் last name  யை சொல்ல வேண்டும். ]

அதன் பின் என்னை புன்சிரிப்புடன் வரவேற்று, சில பல இடங்களில் கையொப்பம் வாங்கிக்கொண்டு ரூம் சாவி கொடுக்கப்பட்டது. அப்பாடா என்று ரூமில் வந்து விழுந்தேன். சிறுது நேரத்தில் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்க ரூம் சர்வீஸ்ல் ஆர்டர் பண்ணலாம் என்று menu  வை எடுத்து பார்த்தேன். ஒரு மண்ணும் புரியாததால் direct  ஆக phone  பண்ணி கேட்போம் என்று phone செய்தேன்.


" ஹலோ.. I want a vegetarian burger"  இது நான்.


"sorry.. I am not understanding you.. "   இது எதிர் முனை.


I want a vegetarian burger.."  மறுபடியும் நான்.

"I am having difficulty to understand you.. can you talk little slow please.."   இது எதிர் முனை.

slow வாக பேசவும் என்பதை தப்பாக புரிந்து கொண்டு , கிசு கிசு குரலில் நான்,


ஹலோ.. I...  want...  a...  vegetarian..... burgerrrrr...."

" I am really sorry.. your ascend is too strong..."  இது எதிர் முனை.

என்ன எழவுடா இது , பசிக்கு ஒரு burger order  செய்ய முடியலையே என்ற ஆதங்கத்தில் சத்தமாக

" I want a vegetarian burger.."  என்றேன்.

"டொக்..."  என்று மறுமுனையில் disconnect செய்யும் சப்தம் கேட்டது.


கற்றது # 2:
  Phone  இல் பேசும் போது கத்தாமல் தெளிவாக நிறுத்தி நிதானமாக பேசவேண்டும், குறிப்பாக எதிர் முனையில் பேசுபவர் புரியவில்லை என்று தெளிவாக சொல்லும்போது.]


இது கதைக்கு ஆகாது என்று நினைத்து வெளியில் போய் சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன். ஹோட்டலை விட்டு வெளியே வந்தேன், எதிர்ப்புறமே "Baja Mexican Grill"  என்ற போர்டை பார்த்து உள்ளே நுழைந்தேன். அழகான ஒரு teen age girl  புன்னகையுடன் என்னை வரவேற்றாள்,


" ஹாய்.. "  இது அவள் 


"ஹாய்.." இது நான். 


" to go or here..?"  இது அவள்.

 என்ன இது வந்தவுடன் GO -ன்னு சொல்றா.. ஒன்னும் புரியலையே என்ற குழப்பத்தில்

"sorry..."   இது நான்.

" to go or here..?"  மறுபடியும் அவள். 

"  I am not understanding, what you are asking.." இது நான்.

இதற்குள் என் பின்னால் நான்கு ஐந்து பேர் queue வில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து லேசாக எரிச்சல் தென்பட தொடங்கியது.

"Do you want to eat here... or you want to take it out.."   இது அவள்.

அப்பாடா இதைத்தான் கேட்கிறாளா..உடனே நான்

" பார்சல்...."  என்றேன்

" Sorry ... tell me what you want to eat..? "  இது அவள்.

அங்கிருந்த மெனு போர்டை பார்த்து vegetarian item  ஒன்று தென்படவும்

"நம்பர் 7 "  என்றேன்.

அவளுக்கு நான் பார்சல் என்று சொன்னது புரிந்ததா?, இல்லை அவளே முடிவு செய்தாளா?  எனக்கு தெரியாது.  ஆனால் வேக வேகமாக நான் order செய்த item த்தை pack  செய்து என் கையில் திணித்து என்னை வெகு விரைவாக அந்த இடத்திலிருந்து துரத்தி விட்டாள். போகும் பொது அந்த queue வில் நிற்பவர்கள் எல்லாம் என்னையே ஒரு மாதிரியாக பார்ப்பது போல தோன்றியது..  

  [ கற்றது # 3:
  அமெரிக்காவில் சாப்பாட்டு கடையில் பார்சல் என்று சொல்லக் கூடாது, அதற்கு பதிலாக To Go  என்று சொல்ல வேண்டும்.]
 

இந்த வாரம் கற்றதைக் கண்டோம், அடுத்த வாரம் விற்றதைக் காண்போம்..!!
  
 நன்றி : அமரர் சுஜாதா --> "அலுமினியப் பறவை" மற்றும் "கற்றதும் பெ(வி)ற்றதும்" தலைப்பிற்கு.

Sunday, February 19, 2012

குடலராஜா -2

மெக்சிகோ என்றதும் என்னுடைய குரல் நடுங்க ஆரம்பித்தது.


" எப்போது போகவேண்டும்?" மெதுவாக கேட்டேன்.

"திங்கள் காலை கிளம்பவேண்டும் .. Steve நல்லா ஸ்பானிஷ் பேசுவான். So உனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.."   என்று என் மேனேஜர் பேசிக் கொண்டிருக்க எனக்கு ஏதோ அடிவயத்தில் பிசைவதை போல இருந்தது.

"உனக்கு மெக்சிகோ போவது OK  தானே?  Are you comfortable in travelling to Mexico? "
என்று திடீரென்று கேட்டார். என் குரல் நடுக்கத்தில் இருந்து கண்டுபிடித்தாரா ?அல்லது அவருக்கே தோன்றியதா தெரியவில்லை

"Actually..  நம்ப Sales Team Manager  ஏற்கனவே மெக்சிகோ போயிருக்கார் , அவர் சொன்னதை கேட்டால் ரொம்ப பயமா இருக்கு.. GUN  எல்லாம் தேவைப்படும் போல, இதுவரைக்கும் நான் சினிமாலதான் GUN  பார்த்திருக்கேன்..."
என்று நான் புலம்ப ஆரம்பிக்க

" அட.. நம்ப Sales Team மேனேஜர் Michelle  George தான.. அவன் சும்மா கதை விடுவான், ஒன்னுன்னா .. பத்துன்பான் , அவன் சொல்றதெல்லாம் நம்பிக்கிட்டு. அவன் party ல் சொல்ற கதையெல்லாம் கேட்டுட்டு சும்மா சிரிச்சுட்டு போயிடனும் , அதெல்லாம் serious ஆக எடுத்துக்க கூடாது..!!"
என்று என் கவலையை அலட்சியம் செய்ததோடு ,

"நான் hotel , client  details  எல்லாம் e-mail  அனுப்புறேன்,  Flight Ticket  book  பண்ணிடு..!!"  என்று மெக்சிகோ உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

நான் உடனே Steve  க்கு phone செய்து மெக்சிகோ assignment  பற்றி பேசினேன். அவன் செம cool  ஆக,

"  மெக்சிகோவில் ஒரு பயமும் இல்ல..Sales Team Manager  சொல்றதெல்லாம்  நம்பாதே,  அவன் சும்மா ஒன்னுன்னா .. பத்துன்பான்,  அவன் எப்பயோ..மெக்சிகோ போனதை வச்சு சும்மா கதை விடறான்..எனக்கு நல்லா ஸ்பானிஷ் தெரியும், ரொம்ப easy  யாக manage  பண்ணிடலாம்"
என்று என் மேனேஜர் போலவே பேசினான்.

"நீ முன்னால மெக்சிகோ போயிருக்கியா..? என்றேன்.

"இல்ல .. இதுதான் முதல் trip..!!, I am very excited to go over there.."  என்றான்.

வேறு வழி இன்றி Flight Ticket  மற்றும் Hotel  Room book  செய்தேன்.  அட்லாண்டாவில் ஸ்டீவ் என்னுடன் சேர்ந்துகொள்வதாக திட்டம்.

திங்கள் காலை 6 மணிக்கு flight, ஞாயிற்று கிழமை மதியம் என் மேனேஜரிடம்
இருந்து phone  வந்தது,

" ஒரு முக்கியமான செய்தி.. ஸ்டீவ் ராஜினாமா செய்து விட்டான்,  personnel  problem... அவனோட மனைவி divorce  notice  அனுப்பியிருக்கிறாள்., so.."  என்று இழுத்தார்.

நானும் " So..."  என்று இழுத்தேன்.

"நீ தனியாக   மெக்சிகோவிற்கு போகவேண்டும், இந்த சமயத்தில் வேறு வழியில்லை,  நான் வரலாம் என்று பார்த்தேன் , But  எனக்கு இன்னொரு முக்கியமான meeting  இருக்கிறது.  குட் லக் ,  Have a safe trip..!!"   என்று வாழ்த்தி  phone -ய் வைத்து விட்டார்.

ஞாயிறு இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டேன், கனவில் தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் வருவது போல தோன்றியது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிளம்பினேன்.  Grand  Rapids - இல் Flight  பிடித்து பின் அட்லாண்டாவில் மெக்சிகோ Connecting flight பிடித்தேன்.    

  பக்கத்துக்கு சீட்டில் ஒரு சிடு மூஞ்சி தாத்தா உட்கார்ந்திருந்தார், வந்தவுடன்  ஹெட் போன்ய் மாட்டிக் கொண்டு எதையோ கேட்க ஆரம்பித்து விட்டார். நடுவில் Rest Room  போய் வந்தேன். அப்போது என் சீட்டில் ஒரு print  செய்யப்பட்ட துண்டு பேப்பர் இருந்தது, எடுத்து பார்த்தேன்,

Jesus Saves You..!!  என்று கொட்டை எழுத்தில் print   செய்யப்பட்டிருந்தது.
அடுத்த பக்கத்தை பார்த்தேன் My friend, you must realize you are a sinner,  for all have sinned.. என்று தொடங்கியது அந்த பிரசுரம். இந்த தாத்தா வைத்திருப்பாரோ என்று அவரை பார்த்தேன். மெலிதாக புன்னகைத்து விட்டு மீண்டும் பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டார். எதற்கும் இருக்கட்டும் என்று "Jesus Saves You.."  paper -ஐ மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  

" இன்னும் அரை மணி நேரத்தில் மெக்சிகோ சிட்டியை அடைந்து விடுவோம், மிகவும் அருமையான தட்ப வெப்ப நிலை .. 70F , clear  sky , Aero Mexico  வை  தேர்ந்தெடுத்தற்கு நன்றி..!!"   என்று pilot  அறிவித்தார்.

சொன்னபடியே அடுத்த அரை மணி நேரத்தில் விமானம் மெக்சிகோ சிட்டியில் தரை இறங்கியது. Immigration, custom  clearance  முடித்துவிட்டு சுமார் $200 ய்  மெக்சி க்கன் peso  வாக மாற்றிக்கொண்டு ஏர்போர்ட் வெளியே வந்தேன். வருசையாக  Taxi கள் நின்று கொண்டிருந்தன.

" Avoid golden with maroon color Taxis, choose white with yellow stripe taxis.. they are safe"   என்று என் மேனேஜர் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது.

 வெள்ளை கலரில் மஞ்சள் கோடு போட்ட taxi  இல் ஏறினேன்.  ஹோட்டல் அட்ரஸ்ய் காண்பித்தேன். Taxi  கிளம்பியது,  கொஞ்ச நேரத்தில் டிரைவர் radio வில் யாரையோ கூப்பிட்டு ஸ்பானிஷ்ல் பேசினான் , எனக்கு ஒன்றும் புரியவில்லை, நான் தஞ்சை புன்னைய நல்லூர் மாரியம்மனை வேண்டிக்கொண்டே பாக்கெட்டில் இருந்த   "Jesus Saves You.."  paper- யை  அழுத்தி பிடித்துக்கொண்டேன். Taxi  சென்னை T-Nagarல் இருக்கும் சந்துக்கள் போன்ற ஒரு குறுகிய தெருவில் நுழைந்தது ..

( தொடரும் ..)  







  




Thursday, February 16, 2012

ஆஸ்கார் விருது: Departures


இது February  மாதம், ஓவ்வொரு வருடமும் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் 
Academy Award (Oscar) வழங்கப்படுகிறது. இந்த வருட 84th Academy Awards 
 Feb 26 ஆம் தேதி Kodak Theatre ல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த பதிவு இந்த வருட ஆஸ்கார் படங்களை பற்றியது அல்ல, நான் இதற்குமுன் 
பார்த்த மனதை தொட்ட Academy Award பரிசு வாங்கிய படத்தை பற்றியது,



Departure  என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பிரிவு, புறப்பாடு (ரயில்,விமானம்)மரணம் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம் 
இந்ப் படத்தின் டைட்டில் "Departures", மரணம் என்ற அர்த்தம் கொண்டது. Japanese இயக்குனர் Yojiro Takita கைவண்ணத்தில் உருவானது. டோக்யோ நகரத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் Cello  இசை கருவி வாசித்து வாழ்கை நடத்திக்கொண்டிருப்பவர்தான் படத்தின் நாயகன். திடீரென ஒரு நாள் போதிய நிதி வசதி இல்லாததாலும் , மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாததாலும் அந்த  ஆர்க்கெஸ்ட்ரா குழுவை அதன் உரிமையாளர் மூடிவிடுகின்றார். கையில் காசு இல்லாமல் டோக்யோவில் வாழ்வது முடியாத காரியம், வீட்டு வாடகைக்கே நிறைய பணம் தேவைப்படும். சொந்த கிராமத்தில் அம்மா விட்டு சென்ற வீடு உள்ளது. அதனால் தன் girl friend  உடன் அந்த கிராமத்தில் தன் சொந்த வீட்டில் குடியேறுகிறார்.


ஒரு நாள் உள்ளூர் news paper  -ல் Departure  வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது  என்ற விளம்பரத்தை பார்த்து courier service  வேலையாக இருக்கும் என்று நினைத்து செல்கிறார். பார்த்தவுடன் interview -ல் அதிகம் எந்த கேள்வியும் கேட்காமல் " You are selected.."    என்று சொல்லி கை நிறைய advance பணம் கொடுத்து, வேலை வந்ததும் phone  வரும் ,  உடனே வரவேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார் அந்த Departure  Company ன்  உரிமையாளர். அடுத்த நாள் phone வருகிறது. 


"நீ சும்மா கூட இருந்து நான் என்ன செய்கிறேன் என்று பார், கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கொள்ளலாம்.."   


என்று சொல்லி ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கே ஒரு பிணம் வைக்கப்பட்டு இருக்கிறது, சொந்த பந்தங்கள் சோகமாக இருக்கிறார்கள்.  அந்த பிணத்திற்கு அழகாக makeup  செய்து ஜப்பானிய முறையில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்கின்றார்.  இதன் பின்தான் அவனுக்கு தெரிகிறது தான் எந்த மாதிரி வேலையில் சேர்ந்து இருக்கிறோம் என்பது. இந்த வேலை வேண்டாம் என்று நினைக்கிறான் , ஆனால் கை நிறைய காசு வருகிறது , வேறு வேலையும் கிடைக்கவில்லை அதனால் வேறு வழியின்றி இந்த வேலையை தொடர்கின்றான் அவனுடைய girl friend க்கு தெரியாமல்.


இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் பிணம் சம்பந்தமான சடங்கு வேலை சமூகத்தில் ஒரு கீழ்தரமான வேலையாகவே பார்க்கப்படுகிறது.அவனுடைய நண்பர்கள் மற்றும் girl friend -க்கு இவன் செய்யும் வேலை தெரிய வரும் போது  சந்திக்கும் சங்கடங்கள்,வித விதமான மரணங்கள் , அனுபவங்கள்,வாழ்கையின் நிதர்சன உண்மையை அவன் முகத்தில் பளார் என்று அறைகிறது. படம் பார்க்கும் நம்மையும்தான்..!!


அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையேயான relationship பற்றிய suspense  முடிச்சை அவிழ்ப்பதுடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நம் மனது அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு படத்தின் காட்சிகளையே அசை போடுகிறது. இந்த படத்திற்கு சென்ற இடமெல்லாம் award கிடைத்திருக்கிறது, கிடைத்த award பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனியாக எழுத வேண்டும். 


மிகச் சரியான தெளிவான திரைக் கதை மற்றும் இயக்கம், மனதை பிழிய வைக்கும் இசை, உயிரோடு வாழ்ந்திருக்கும் கதா பாத்திரங்கள். எல்லாம் சேர்ந்து உங்களை வாழ்கை என்றால் என்ன? என்று யோசிக்க வைக்கும் படம். 


 Yojiro Takita  என்னுடைய favorite movie directors list  -இல் சேர்ந்து விட்டார்..!!

Tuesday, February 14, 2012

கமலின் விஸ்வரூபம் ஷூட்டிங்


சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை,  மதிய சாப்பாட்டிற்கு பிறகு குட்டி தூக்கம் போடலாம் என்று படுக்கும் போது Phone வந்தது. பேசியவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தந்தது. அவர் சொன்ன விஷயம் இதுதான்

" கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங் Grand Rapids-ல் நடக்கிறது,   படத்தில் நடிக்க ஒரு family  அதாவது கணவன், மனைவி , இரண்டு குழந்தைகள் தேவைப்படுகிறது, 3 நாட்கள் ஷூட்டிங். புதன் கிழமை ஷூட்டிங் location க்கு வரவேண்டும்.. ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள் .உங்கள் பெயரை கொடுத்து விடுகிறேன் ."

 மூன்று நாள் Office -க்கு லீவு மற்றும் குழந்தைகள் ஸ்கூலுக்கு லீவு, அது மட்டுமல்லாமல் முக்கியமாக கடைசியில் சினிமா ரிலீஸ் ஆகும்போது " அதோ பார்..!! அங்க முதுகை காம்பிச்சிக்கிட்டு ப்ளூ கலர் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தன் ஓடுறான்ல .. அது நான்தான் ..!!"  என்று சொல்ல வேண்டிவருமோன்னு பயந்து,

"பார்க்கலாம்.. நாளைக்கு சொல்லுகிறேன் "  என்று பதில் சொன்னேன்.

சாயங்காலம் வழக்கம்போல ஒரு பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். இந்த விஷயத் தை நண்பர்களிடம் சொல்லலாம் என்று நினைக்கும்போது இன்னொரு நண்பர் அவருக்கும் இதே போல Phone  வந்ததாகவும் என்னைப் போலவே Office, School  லீவ் மற்றும் கும்பலோடு கும்பலாக நிற்க வைத்து விடுவார்களோ என்று பயந்து மறுத்து விட்டதாக சொன்னார். இது போல நிறைய நண்பர்களுக்கு Phone வந்தது தெரிய வந்தது.

உண்மையிலேயே ஷூட்டிங் நடக்கிறதா? இல்லை யாராவது Phone  செய்து விளையாடுகிறார்களா?  என்று சந்தேகம் வரும்போதே .. இங்குள்ள பிரபலமான University  -இல் படிக்கும் நண்பரின் மகன் மதியம் அவர்கள் Campus -ல் ஷூட்டிங் நடந்ததாகவும் கமல் உட்பட இன்னும் சிலர் நடித்ததாகவும் Facebook - ல் இதுபற்றி தான் எழுதியிருப்பதாகவும் சொல்லி இந்த ஷூட்டிங் விஷயம் உண்மைதான் என்பதை உறுதிப்படித்தினார்.

மறுநாள் அரிசி வாங்க உள்ளூர் Indian Grocery கடைக்கு சென்றேன். எப்போதும் கடைக்காரரின் மனைவிதான் கடையை பார்த்துக்கொள்வார், ஆனால்  அன்று அவர் இருந்தார்.


"எங்கே அவங்க இல்லையா இன்னைக்கு..? " என்றேன்.


"நீங்க வேற.. ரெண்டு நாளா ஷூட்டிங் போய்கிட்டு இருக்கா.. எதோ accident scene  - ல கூட நின்னு வேடிக்கை பார்க்கனுமாம்.. "   என்றார். 

அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து vacation முடிந்து வரும் நண்பரை ஏர்போர்ட்டி லிருந்து pickup  செய்து கொண்டு வந்துகொண்டிருந்தேன்.

" ஏதோ ஷூட்டிங் நடக்குது போல,   ஏர்போர்ட் உள்ள .. ட்ராலி , லைட் எல்லாம் வச்சி செட் பண்ணிக்கிட்டு இருக்காங்க " என்றார்.

இது போல Mall- ல ஷூட்டிங் , Highway Exit - ல ஷூட்டிங், Library  ல ஷூட்டிங் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்குள் அனைவருக்கும் இந்த விஸ்வரூபம் படத்தை தயாரிப்பது யார் ?  செல்வராகவன் விலகியதன் காரணம் என்ன? கமலே இயக்க முடிவு செய்தது ஏன்?  படத்தின் budget  எவ்வளவு?  படத்தின் கதாநாயகி Miss India USA from New Jersey என்ற அனைத்து விபரங்களையும் கரைத்து குடித்திருந்தோம். கலந்துகொள்ளும் எல்லா Party யிலும் இதுவே முக்கிய பேச்சாக இருந்தது.
  
"எவ்வளவோ cities அமெரிக்காவில் இருக்க Grand Rapids-ய் choose பண்ண காரணம் என்ன? "   என்று மிக முக்கியமான கேள்வியை ஒரு நண்பர் தொடுத்தார்.

 அதற்கும் சளைக்காமல் இன்னொரு நண்பர் பதில் சொன்னார்

" Michigan state gives 40% tax credit for movie production and animation business. Also production cost is very less in Grand Rapids compare with LA or Chicago.."

உண்மையிலேயே கமல் எதற்காக Grand Rapids - ய் தேர்ந்தெடுத்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.!! ஆனால் எங்கள் Week End Party  - இல் பொழுது நன்றாக போய்கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் இந்த செய்தி வந்தது


"ஷூட்டிங் முடிந்து விட்டது.. படக்குழு இந்தியா புறப்பட்டு விட்டார்கள்.."


இப்பொழுது நாங்கள் ஷூட்டிங் பற்றி Week End Party - இல் பேசுவதில்லை. ஆனால்  விஸ்வரூபம் படத்தின் Release -க்கு காத்திருக்கிறோம்.

 

  

Sunday, February 12, 2012

குடலராஜா -1

Boston.  Down Town-ல் கடல் view  தெரியும்படியான மிகவும் பிரசித்திபெற்ற Sea Food Restaurant-ல் ஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் office-ன் Sales Team Manager  மற்றும் இதர Co-Workers வுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எல்லோரும் Oyster-யும் Lobster-யும் நொறுக்கிகொண்டிருக்க நான் வழக்கம் போல Salad- ஐ வேண்டா வெறுப்பாக கிளறிக்கொண்டிருந்தேன். 

"  I think it's end of  2002.. that time I was in the product installation team .. " 

 Sales Team மேனேஜர் பேசிக் கொண்டிருந்தார்,  எப்போதும் போல வேறு யாரையம் பேச விடாமல் அவரே பேசிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவர் பேசுவதை வேறு சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் excuse கேட்டுவிட்டு restroom-க்கு சென்றேன். வழியில் மனைவிக்கு phone  செய்து நாளை மதியம் வந்து விடுவேன் என்றும் கட்டாயம்  காரசாரமாக புளிக் குழம்பும், ரசமும் செய்து வைக்கும்படியும் அன்புக் கட்டளையிட்டேன். திரும்பி வந்து மறுபடியும் Salad- ஐ கிளற ஆரம்பித்தேன். Sales Team Manager இன்னும் பேசிக்கொண்டிருந்தார்.

"It really helped me lot when I was there, that's why first thing the client did was ... sent me for a training, I am already familiar with sigma 9 mm. But they want to make sure that I can handle any situation.." 

சரி, வழக்கம் போல இந்த Sigma, ISO போன்ற certification சமாச்சரங்களை பத்தி பேசிக் கொண்டிருக்கிறார் என்று கேட்க ஆரம்பித்தேன். 

" this was my 3rd or 4th trip there.. came out of the Airport,  got into the Taxi  and told  my hotel address. I was watching outside and the driver was going in different route.. He called somebody in radio and asked them to wait. Though he was talking in Spanish, I understood what he was talking in radio.. Immediately I took my GUN, the SIGMA 9mm and put it on his head and asked him to go back to Air Port. No other option he turned the car back to Airport.. till reaching Airport I was pointing the GUN  in his head. Once reached the Airport  I said F......  and  got out of the Taxi."


 சுள்ளென்று பச்சை மிளகாயை கடித்தது போலிருந்தது. 

" What..!! Where? Which place this happened? " - இது நான்.

"MEXICO.."  என்று பதில் வந்தது. 

மறு நாள் வீட்டிற்கு வந்து புளிக் குழம்பும், ரசமும் திவ்வயமாக சாப்பிட்டேன். கூடுதலாக என் மனைவி எனக்காக பருப்பு துவையலும் செய்திருந்தாள். சரியாக நான்கு மாதங்கள் கழித்து என் மேனேஜர் phone பன்னினார். ஒரு high profile project கிடைத்திருப்பதாகவும் என்னையும் Steve-யும் அதற்கு assign  பண்ணி இருப்பதாகவும் கூறினார். Project எந்த ஊரில் என்று கேட்டேன் 

"MEXICO.."  என்று பதில் வந்தது. 

(தொடரும்..)






















  

Friday, February 10, 2012

GR Talkies

நான் வசிக்கும் Grand Rapids ஒரு சின்ன நகரம், மிசிகன் எரியிலிருந்து 25 மைல் உள் தள்ளி இருக்கும் அழகான ஊர். இப்போது அமெரிக்காவில் Walmart இல்லாத ஊர் உண்டு, ஆனால் இந்தியர்கள் இல்லாத ஊர் இல்லை எனலாம், Grand Rapids ல் மட்டும் குறைந்தது 700 இந்திய  குடும்பங்கள் இருக்கும் என்பது என் கணக்கு. கடந்த 4ஆண்டுகளாக இங்கிருக்கும் இந்தியர்கள் பொங்கல் திருவிழாவை ஜனவரி -14ல் கொண்டாட ஆரம்பித்தோம். வழக்கமான பாட்டு ஆட்டம் இல்லாமல் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்தோம். அதில் பிறந்ததுதான் GR Talkies. கடந்த 3ஆண்டுகளாக குறும் படம் எடுத்து Grand Rapids பொங்கல் திருவிழாவில் ரிலீஸ் செய்துகொண்டு இருக்கிறோம். கீழே GR Talkies ன் முதல் படம்,  

மைகேல் மதன காமராஜன்:
Grand Rapids -இல்அதிகம் இந்தியர்கள் வசிக்கும் ஒரு அழகான குடியிருப்பு, அந்த community யின் President மதன்ஒரு இந்தியர். ஒரு நாள் ஜெயிலிருந்து விடுதலையானஅதி பயங்கரமான மைகேல் என்ற Criminal அந்த community  இல்  குடியேறுகிறான். அதன் பின் ஏற்படும் விளைவுகளை எப்படி மதன் தன் நண்பர்கள் காமேஷ் மற்றும் ராஜன் உதவியுடன் சந்திக்கிறான் என்பதை நகைச் சுவையாக சொல்லும் கதை. 

PART 1:
PART 2:

Next Movie Trailer:


பயணங்கள் முடிவதில்லை:

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நடுத்தர இந்திய குடும்பம், ஒரு கல்யாணத்திற்காக இந்தியாவிற்கு பயணம் கிளம்பும் போது நடக்கும் கலாடக்களின் பதிவுதான் "பயணங்கள் முடிவதில்லை" என்ற இந்த குறும்படம். 


பலாப்பழம்

சென்ற வாரம் சிகாகோ போயிருந்தேன். வழக்கம் போல Devon Street க்கு போய்..
( Devon Street பற்றி தெரிந்தவர்கள் கீழ் பத்தியை skip செய்யலாம்.)

Devon Street:
சிகாகோ-வில் இந்திய மளிகை, காய், நகை, துணி , சாப்பாட்டு கடைகள் நிறைந்த ,  இந்தியாவை போலவே honk  செய்துகொண்டு, குறுக்கும் நெடுக்கும் road-ல் கிராஸ்செய்துகொண்டு, எதிர் வரும் இந்தியர்களை முறைத்துக்கொண்டு, parking lot கிடைக்காமல் அலைந்துகொண்டு அல்லல் மற்றும் அவஸ்தை படும் இடம் தான் Devon Street என்று மிகவும் பிரபலமாக சிகாகோ- வில் அழைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இடத்தில்தான் என் மனைவி எப்போதும் grocery shopping செய்வது வழக்கம், ஏனென்றால் காரைப் பார்க் செய்ய அவஸ்தை பட  போவது நான்தானே, ஒரு வழியாய் காரை கிடைத்த தம்மா துண்டு இடத்தில 
ஒரு மார்கமாக சொதப்பல் Parallel Parking செய்துவிட்டு Pattel Brothers கடைக்குள் நுழைத்தேன்.என்னை முதலில் வரவேற்றது அறுத்து வைத்திருந்த பலாப்பழம். பார்த்தவுடன் மனது சிகாகோ வில் இருந்து நேராக தஞ்சை பூக்கார தெரு காய் கறி மார்க்கெட்க்கு சென்றது. 

 ஒவ்வொரு summer  விடுமுறையும் எனக்கு தஞ்சாவூர் தான் கதி..!! பாட்டி வீட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்,  அங்கு சித்தப்பா, அவர்  பையன்கள், மாமா , சித்தி எல்லோரும் பெரும் கூட்டமாக கோடை விடுமுறையை கழிப்போம். காலை எழுந்தவுடன் கப்பல் சித்தப்பா ( கப்பலில் வேலை பார்த்ததால் வந்த காரணப் பெயர்) காய் வாங்க பூக்கார தெரு கிளம்பிவிடுவார். சில சமயம் நானும் அவருடன் சைக்கிளில் போவேன். அவர் மார்க்கெட் உள்ளே நுழைந்தவுடன் நேராக பலாப்பழம் மலை மலையக குவித்து வைத்திருக்கும் இடத்துக்கு போவார், வாசனை பிடிப்பார்,  தூக்கி பார்ப்பார் , பேரம் பேசுவார் "அட விருந்தாளி எல்லாம் வந்திருக்கு முடிச் சூடுமையா"  ன்னு சொல்லி ஒரு வழியாக வாங்கி சைக்கிள் கேரியரில் கட்டி கிளம்புவோம். 

   பலாப்பழம் சைக்கிள் கேரியரில் போவதை பார்பதற்கு எதோ ஒரு பெரிய பச்சை கலர் பாறாங்கல் போவது போல இருக்கும். தொட்டு பார்த்தால் குத்தும் , ஆனால் அந்த வலியும் இதமாக இருக்கும்.  வீட்டுக்கு வந்ததும் நேராக கொல்லைபுறத்திற்கு பலாப்பழம் கொண்டு போகப்படும். பெரிய மாமா நல்லெண்ணெய் கிண்ணம், பெரிய கத்தி சகிதம் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து " எலே.. அந்த பலாப்பழத்தை இங்கன உரிட்டிக்கிட்டு வா.. "  என்பார். சொல்லும் தோரணையிலேயே அவர்தான் பலாப்பழம் உரிப்பதில் expert என்பது தெரியம்.சின்னஞ் சிறுசுகள் நாங்கள் சுற்றி உட்கார்ந்திருக்க வெகு லாகவகமாக உரிக்க ஆரம்பிப்பார்.பலாப்பழ பால் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக்கொள்ளவார்.  " ராஜா.. சித்திகிட்ட போய் பலா கொட்டை வைக்க முறம் வாங்கிகிட்டு வா .." ,"  இத கொண்டுபோய் குப்பையில போடு "   என்று அவர் தரும் சின்ன சின்ன வேலைகளுக்காக காத்திருப்பேன்.  
மிக நேர்த்தியாக பலாச்சுளை தனியாக, கொட்டை தனியாக பிரித்து வைத்துவிடுவார். சித்தி முறத்தை எடுத்துக் கொண்டு போய் வெய்யிலில் பலா கொட்டையை காய வைப்பார், அந்த பலா கொட்டையை பார்த்தாலே எரிச்சலாக வரும், பின்ன..அடுத்த 3 நாள் முருங்கக்காய், பலா கொட்டை, மாங்காய் போட்ட சாம்பார் தான் fixed menu. "ரொம்ப சாப்பிடாதிங்க.. வயித்த வலிக்கும்.." சித்தியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல் பலாச்சுளையை  சும்மா உட்டு ரவுண்டு கட்டிட்டு அப்பறமா அவஸ்தை படுவோம்.  

Back To Chicago:
 விலை என்ன? ஏது என்று எதையும் பார்க்காமல் அந்த வெட்டி வைத்திருந்த சின்ன பலாப்பழத் துண்டை ஷாப்பிங் கார்டனில் எடுத்து வைத்தேன். Check Out counter ல் ஸ்கேன் பன்னும் போது அந்த சின்ன பலாப்பழத் துண்டின் விலை $9.85 என்று காட்டியது. என் மனைவியின் அக்னி பார்வையை சந்திக்க திராணியட்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பெரிய மாமாவை போல " அந்த  நல்லெண்ணெய் கிண்ணத்தையும், பெரிய கத்தியையும் எடுத்து வை..week end  பலா கொட்டை சாம்பார்.. " என்று மனைவிக்கு கட்டளை இட " ஆமாம்.. இந்த micro size பலாப்பழத்துக்கு ஆடம்பரம் வேற.. அப்படியே பிச்சி சாப்பிடுங்க.."  என்று பதில் வந்தது. வேறு வழியின்றி "Product of Brazil"  என்ற sticker-ய் எடுத்துவிட்டு முதல் பலாச் சுளையை சுவைத்தேன். அனேகமாக 6 , 7  ஆண்டுகளுக்கு பிறகு நான் சாப்பிடும் முதல் சுளை,கடைசியாக இந்தியாவில் சாப்பிட்டது. செறுப்பு வாரை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது போல இருந்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் பெரும் அவஸ்தை.. face reaction னில்  இருந்தே என் மனைவிக்கு புரிந்து விட்டது. இரண்டு சுளைகளை கஸ்டப்பட்டு முழுங்கினேன் , மேற்கொண்டு திண்றால் 911 க்கு call பண்ண வேண்டி வரும் என்பதால் trash-ல்  போட்டுவிட்டு Good Bye.. சொன்னேன். மீண்டும் ஒரு power full அக்னி பார்வை என் மனைவியிடமிருந்து பரிசாக கிடைத்தது.

ஒரு வாரம் கழித்து சித்தியிடம் Phone-ல் பேசிக்கொண்டிருந்தேன், தஞ்சாவூரில் சொந்தத்தில் நடந்த கல்யாணம் கருமாதி செய்திகளை சொல்லிவிட்டு கடைசியாக சொன்னார்கள், "கொல்லப்பக்கம் வச்ச பலா மரம் பிஞ்சி வச்சிருக்கு இன்னும் 2  மாசத்தில பலாப்பழம் சாப்பிடலாம்..ஊருக்கு வரியா ராஜா ? "  

Flight Ticket பார்த்துக் கொண்டிருக்கிறேன், எந்த travel agent நல்ல deal தருகிறான் என்று தெரியுமா?