Mexico City Street. |
பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்காக தாரளமாக tips கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நல்ல வசதியான ஹோட்டல், Check in முடித்துவிட்டு Office -க்கு கிளம்பினேன். சுமார் நான்கு block தள்ளிதான் office.
Santa Fe |
"இவள் பெயர் பவுலா.. from Argentina , இவளுக்கு இங்கிலீஷ்ம் நன்றாக தெரியும், உன்னுடைய team -ஐ இவள் அறிமுகப் படுதுவாள்..உனக்கு ஸ்பானிஷ் புரியாத இடங்களில் இவள் translate செய்து உதவுவாள்.. " என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
பவுலா சின்ன skirt -ம், tight ஆன T-Shirt -ம், நல்ல உயரமான ஹீல்ஸ்ம் போட்டிருந்தாள். என்னை நான் work பண்ண வேண்டிய team -க்கு அறிமுகப்படுத்த அழைத்துக்கொண்டு போனாள். என் Cell Phone சினுங்கியது, எடுத்தால் என் மேனேஜர்,
" ஹாய்.. மெக்ஸிகோ எப்படி இருக்கிறது? பயமாக இருக்கிறதா ..? Are you safe and comfortable? " என்றார்.
" மெக்ஸிகோ சுகமாக இருக்கிறது.. ரொம்ப comfortable ஆக இருக்கிறேன், இப்பொது ஒரு meeting -க்கு போய்கொண்டிருக்கிறேன், அப்புறமாக பேசலாம் " என்று சொல்லி மேனேஜர்யை cut செய்தேன் , "நேரம் காலம் தெரியாமல் phone செய்து கொண்டு.." என்று மேனேஜர்யை மனதிற்குள் திட்டினேன்.
சப்பாத்தி கள்ளி , சைவ உணவு. |
மீச்சிலாடா |
முதல் கட்டமாக Guadalajara என்ற ஊரில் installation செய்வதாக உத்தேசம்.
ஆகவே என் பேச்சில் அடிக்கடி "குடலராஜாவில் இன்ஸ்டால் செய்யும்போது .." என்று பேசிக்கொண்டிருந்தேன். பவுலா என்னை இடைமறித்து
"குடலராஜா.. குடலராஜா..என்று சொல்கிறாயே .. அது என்ன technology? அதை பற்றி இவர்கள் கேள்விப்பட்டதில்லை என்கிறார்கள்.. நீ கொஞ்சும் அதை விளக்கமாக சொல்லமுடியுமா? " என்று கேட்டாள்.
அடக் கடவுளே ..!! இவ்வளளு நேரம் நான் சொன்னது யாருக்கும் புரியவில்லையா.. ?
" நாம் இன்ஸ்டால் செய்யப்போகும் ஊர்தானே குடலராஜா? அதைத்தான் சொல்கிறேன் .. டெக்னாலஜி பேர் எல்லாம் கிடையாது .." என்றேன்.
அவள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாள், ஸ்பானிஷில் J யை H ஆகவும் G யை sometimes silent ஆகவும் உபயோகிக்கவேண்டும் என்றாள்.
ஆகவே அந்த ஊரின் பெயர் குடலராஜா அல்ல "க்குவடலஹாரா.." என்பதை தெரிந்து கொண்டேன். அந்த வார சனி ஞாயிறு அங்கேயே தங்க வேண்டி இருந்தது. மெக்ஸிகோ சிடியை சுற்றிப்பார்க்க என் team member வுடன் கிளம்பினேன். அவன் Peru நாட்டை சேர்த்தவன் , ஸ்பானிஷ் உடன் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் அவனுடன் சென்றேன்.
நம்மூர் முறுக்கு அல்ல.. இது வேறு..!! |
ஒரு இடத்தில வண்ண வண்ண உடை அணிந்த அழகான இளம் பெண்கள் நிறைய பேர் நின்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். உடல் ஊனமுற்ற பெண்களும் அவ்வாறே ஆடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.என் நண்பர் என்னவென்று விசாரித்து வந்தார். அவர் வந்து சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது.
எப்படி தமிழ்நாட்டில் வயதுக்கு வரும் இளம் பெண்களை அழகாக அலங்கரித்து சடங்கு செய்வார்களோ, அதே போல மெக்ஸிகோவிலும் செய்வார்களாம். ஆனால் பணக்கார வீட்டு பெண்களுக்கு செய்வது போல ஏழை வீ ட்டு பெண்களுக்கு செய்ய முடிவதில்லை. சிலர் பணம் இல்லாமல் இந்த சடங்கை நிறுத்திவிட்டார்கள். வயதுக்கு வரும் ஏழை பெண்களுக்கு அந்த மன வருத்தம் இருக்கக் கூடாதென்று அரசாங்கமே செலவு செய்து இந்த விழாவை நடத்துவதாகவும் , அதில் கலந்து கொள்ள உடை மற்றும் அனைத்து செலவும் அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். அந்த பெண்கள் அனைவரும் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பஸ்சில் வந்திருந்தார்கள். இந்த இடத்தில நடனமாடி முடித்தபின் சிட்டியின் வேறு இடத்தில சென்று நடனமாடுவார்கள். அதன் பின் இரவு விருந்தும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்மூரை போலவே இங்கும் ரோட்டுகடை சாப்பாடு பிரபலம். நாங்களும் ரோட்டுக்கடை சாப்பாட்டை சுவைக்க சென்றோம். ஒரு கடையில் நிறைய கூட்டம், மற்ற கடையிலும் சுமாரான கூட்டம், ஒரு கடையில் மிகவும் குறைவாக கூட்டம். அருகில் சென்று விசாரிக்கும் போதுதான் தெரிந்தது மிகவும் கூட்டமான கடையில் கிடைப்பது ஆட்டு நாக்கு என்பதும் மற்ற கடைகளில் மூளை , ஈரல் என்று பதார்த்தங்களை விற்றுகொண்டிருந்தர்கள் என்பதும். கூட்டமே இல்லாத கடை வெஜிடேரியன் எனபது சொல்லாமலே தெரிந்தது. நான் அங்கு ஓடிவிட்டேன்,என் நண்பர் ஈரலோ , குடலோ எதையோ
சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார். இங்கு அதிகமாக சமையலில் உபயோகிக்கப்படும் காய் நம்மூரில் சப்பாத்தி கள்ளி என்று சொல்லப்படும் முள்ளு முள்ளாக இருக்குமே அந்த செடியின் பாகம்தான். அதன் முள்ளை எடுத்து விட்டு நன்றாக வேகவைத்து சமைத்து தருகிறார்கள். நன்றாக சுவையாக இருக்கிறது.
Tequila செய்ய உபயோகப்படும் Agave தாவரம். |
பிரபலமான Tequila Brand. |
Guadalajara சாப்பாடு. |
இப்படியாக ஆறு மாதம் ஓடியது. ஒரு வழியாக project -யை முடித்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பினேன். கொஞ்ச நாள் கழித்து Boston -க்கு ஆபீஸ் விசயமாக போனேன். அன்று இரவு எல்லோரும் dinner சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்,
" When I was having my dinner , this guy was holding a gun and walking towards me.."
எங்களுடைய Sales Team Manager சொல்லிக் கொண்டிருந்தார்.
"Where was this..? " புதிதாக எங்கள் ஆபீசில் சேர்த்த அவன் பயத்துடன் கேட்டான்.
" Sao Paulo, Brazil " என்றார் Sales Team மேனேஜர்.
நான் மனதில் சிரித்துக்கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.
(முற்றும்).
Cool experience.
ReplyDeletePlease extend the trip details to continue....
Thanks
Raja
ரொம்ப அருமை...அப்புறம் டகிலா சாப்டீங்களா..? என்னோட பேவரைட் இது தான்.,..அப்புறம் ஏன் முற்றும் போட்டு ....தொடரலாமே..நன்றாக இருக்கிறது ..
ReplyDelete