இது February மாதம், ஓவ்வொரு வருடமும் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில்
Academy Award (Oscar) வழங்கப்படுகிறது. இந்த வருட 84th Academy Awards
Academy Award (Oscar) வழங்கப்படுகிறது. இந்த வருட 84th Academy Awards
Feb 26 ஆம் தேதி Kodak Theatre ல் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்த பதிவு இந்த வருட ஆஸ்கார் படங்களை பற்றியது அல்ல, நான் இதற்குமுன்
பார்த்த மனதை தொட்ட Academy Award பரிசு வாங்கிய படத்தை பற்றியது,
இந்த பதிவு இந்த வருட ஆஸ்கார் படங்களை பற்றியது அல்ல, நான் இதற்குமுன்
பார்த்த மனதை தொட்ட Academy Award பரிசு வாங்கிய படத்தை பற்றியது,
Departure என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பிரிவு, புறப்பாடு (ரயில்,விமானம்), மரணம் என்று பல அர்த்தங்கள் கொள்ளலாம்
இந்தப் படத்தின் டைட்டில் "Departures", மரணம் என்ற அர்த்தம் கொண்டது. Japanese இயக்குனர் Yojiro Takita கைவண்ணத்தில் உருவானது. டோக்யோ நகரத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் Cello இசை கருவி வாசித்து வாழ்கை நடத்திக்கொண்டிருப்பவர்தான் படத்தின் நாயகன். திடீரென ஒரு நாள் போதிய நிதி வசதி இல்லாததாலும் , மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாததாலும் அந்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவை அதன் உரிமையாளர் மூடிவிடுகின்றார். கையில் காசு இல்லாமல் டோக்யோவில் வாழ்வது முடியாத காரியம், வீட்டு வாடகைக்கே நிறைய பணம் தேவைப்படும். சொந்த கிராமத்தில் அம்மா விட்டு சென்ற வீடு உள்ளது. அதனால் தன் girl friend உடன் அந்த கிராமத்தில் தன் சொந்த வீட்டில் குடியேறுகிறார்.
ஒரு நாள் உள்ளூர் news paper -ல் Departure வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது என்ற விளம்பரத்தை பார்த்து courier service வேலையாக இருக்கும் என்று நினைத்து செல்கிறார். பார்த்தவுடன் interview -ல் அதிகம் எந்த கேள்வியும் கேட்காமல் " You are selected.." என்று சொல்லி கை நிறைய advance பணம் கொடுத்து, வேலை வந்ததும் phone வரும் , உடனே வரவேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார் அந்த Departure Company ன் உரிமையாளர். அடுத்த நாள் phone வருகிறது.
"நீ சும்மா கூட இருந்து நான் என்ன செய்கிறேன் என்று பார், கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கொள்ளலாம்.."
என்று சொல்லி ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கே ஒரு பிணம் வைக்கப்பட்டு இருக்கிறது, சொந்த பந்தங்கள் சோகமாக இருக்கிறார்கள். அந்த பிணத்திற்கு அழகாக makeup செய்து ஜப்பானிய முறையில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்கின்றார். இதன் பின்தான் அவனுக்கு தெரிகிறது தான் எந்த மாதிரி வேலையில் சேர்ந்து இருக்கிறோம் என்பது. இந்த வேலை வேண்டாம் என்று நினைக்கிறான் , ஆனால் கை நிறைய காசு வருகிறது , வேறு வேலையும் கிடைக்கவில்லை அதனால் வேறு வழியின்றி இந்த வேலையை தொடர்கின்றான் அவனுடைய girl friend க்கு தெரியாமல்.
இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் பிணம் சம்பந்தமான சடங்கு வேலை சமூகத்தில் ஒரு கீழ்தரமான வேலையாகவே பார்க்கப்படுகிறது.அவனுடைய நண்பர்கள் மற்றும் girl friend -க்கு இவன் செய்யும் வேலை தெரிய வரும் போது சந்திக்கும் சங்கடங்கள்,வித விதமான மரணங்கள் , அனுபவங்கள்,வாழ்கையின் நிதர்சன உண்மையை அவன் முகத்தில் பளார் என்று அறைகிறது. படம் பார்க்கும் நம்மையும்தான்..!!
அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையேயான relationship பற்றிய suspense முடிச்சை அவிழ்ப்பதுடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நம் மனது அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு படத்தின் காட்சிகளையே அசை போடுகிறது. இந்த படத்திற்கு சென்ற இடமெல்லாம் award கிடைத்திருக்கிறது, கிடைத்த award பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனியாக எழுத வேண்டும்.
மிகச் சரியான தெளிவான திரைக் கதை மற்றும் இயக்கம், மனதை பிழிய வைக்கும் இசை, உயிரோடு வாழ்ந்திருக்கும் கதா பாத்திரங்கள். எல்லாம் சேர்ந்து உங்களை வாழ்கை என்றால் என்ன? என்று யோசிக்க வைக்கும் படம்.
Yojiro Takita என்னுடைய favorite movie directors list -இல் சேர்ந்து விட்டார்..!!
No comments:
Post a Comment