சென்ற மாதம் ஒரு சனிக்கிழமை, மதிய சாப்பாட்டிற்கு பிறகு குட்டி தூக்கம் போடலாம் என்று படுக்கும் போது Phone வந்தது. பேசியவர் சொன்ன விஷயம் எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தந்தது. அவர் சொன்ன விஷயம் இதுதான்
" கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங் Grand Rapids-ல் நடக்கிறது, படத்தில் நடிக்க ஒரு family அதாவது கணவன், மனைவி , இரண்டு குழந்தைகள் தேவைப்படுகிறது, 3 நாட்கள் ஷூட்டிங். புதன் கிழமை ஷூட்டிங் location க்கு வரவேண்டும்.. ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள் .உங்கள் பெயரை கொடுத்து விடுகிறேன் ."
மூன்று நாள் Office -க்கு லீவு மற்றும் குழந்தைகள் ஸ்கூலுக்கு லீவு, அது மட்டுமல்லாமல் முக்கியமாக கடைசியில் சினிமா ரிலீஸ் ஆகும்போது " அதோ பார்..!! அங்க முதுகை காம்பிச்சிக்கிட்டு ப்ளூ கலர் சட்டை போட்டுக்கிட்டு ஒருத்தன் ஓடுறான்ல .. அது நான்தான் ..!!" என்று சொல்ல வேண்டிவருமோன்னு பயந்து,
"பார்க்கலாம்.. நாளைக்கு சொல்லுகிறேன் " என்று பதில் சொன்னேன்.
சாயங்காலம் வழக்கம்போல ஒரு பர்த்டே பார்ட்டிக்கு சென்றேன். இந்த விஷயத் தை நண்பர்களிடம் சொல்லலாம் என்று நினைக்கும்போது இன்னொரு நண்பர் அவருக்கும் இதே போல Phone வந்ததாகவும் என்னைப் போலவே Office, School லீவ் மற்றும் கும்பலோடு கும்பலாக நிற்க வைத்து விடுவார்களோ என்று பயந்து மறுத்து விட்டதாக சொன்னார். இது போல நிறைய நண்பர்களுக்கு Phone வந்தது தெரிய வந்தது.
உண்மையிலேயே ஷூட்டிங் நடக்கிறதா? இல்லை யாராவது Phone செய்து விளையாடுகிறார்களா? என்று சந்தேகம் வரும்போதே .. இங்குள்ள பிரபலமான University -இல் படிக்கும் நண்பரின் மகன் மதியம் அவர்கள் Campus -ல் ஷூட்டிங் நடந்ததாகவும் கமல் உட்பட இன்னும் சிலர் நடித்ததாகவும் Facebook - ல் இதுபற்றி தான் எழுதியிருப்பதாகவும் சொல்லி இந்த ஷூட்டிங் விஷயம் உண்மைதான் என்பதை உறுதிப்படித்தினார்.
மறுநாள் அரிசி வாங்க உள்ளூர் Indian Grocery கடைக்கு சென்றேன். எப்போதும் கடைக்காரரின் மனைவிதான் கடையை பார்த்துக்கொள்வார், ஆனால் அன்று அவர் இருந்தார்.
"எங்கே அவங்க இல்லையா இன்னைக்கு..? " என்றேன்.
"நீங்க வேற.. ரெண்டு நாளா ஷூட்டிங் போய்கிட்டு இருக்கா.. எதோ accident scene - ல கூட நின்னு வேடிக்கை பார்க்கனுமாம்.. " என்றார்.
அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து vacation முடிந்து வரும் நண்பரை ஏர்போர்ட்டி லிருந்து pickup செய்து கொண்டு வந்துகொண்டிருந்தேன்.
" ஏதோ ஷூட்டிங் நடக்குது போல, ஏர்போர்ட் உள்ள .. ட்ராலி , லைட் எல்லாம் வச்சி செட் பண்ணிக்கிட்டு இருக்காங்க " என்றார்.
இது போல Mall- ல ஷூட்டிங் , Highway Exit - ல ஷூட்டிங், Library ல ஷூட்டிங் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதற்குள் அனைவருக்கும் இந்த விஸ்வரூபம் படத்தை தயாரிப்பது யார் ? செல்வராகவன் விலகியதன் காரணம் என்ன? கமலே இயக்க முடிவு செய்தது ஏன்? படத்தின் budget எவ்வளவு? படத்தின் கதாநாயகி Miss India USA from New Jersey என்ற அனைத்து விபரங்களையும் கரைத்து குடித்திருந்தோம். கலந்துகொள்ளும் எல்லா Party யிலும் இதுவே முக்கிய பேச்சாக இருந்தது.
"எவ்வளவோ cities அமெரிக்காவில் இருக்க Grand Rapids-ய் choose பண்ண காரணம் என்ன? " என்று மிக முக்கியமான கேள்வியை ஒரு நண்பர் தொடுத்தார்.
அதற்கும் சளைக்காமல் இன்னொரு நண்பர் பதில் சொன்னார்
" Michigan state gives 40% tax credit for movie production and animation business. Also production cost is very less in Grand Rapids compare with LA or Chicago.."
உண்மையிலேயே கமல் எதற்காக Grand Rapids - ய் தேர்ந்தெடுத்தார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.!! ஆனால் எங்கள் Week End Party - இல் பொழுது நன்றாக போய்கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு நாள் இந்த செய்தி வந்தது
"ஷூட்டிங் முடிந்து விட்டது.. படக்குழு இந்தியா புறப்பட்டு விட்டார்கள்.."
இப்பொழுது நாங்கள் ஷூட்டிங் பற்றி Week End Party - இல் பேசுவதில்லை. ஆனால் விஸ்வரூபம் படத்தின் Release -க்கு காத்திருக்கிறோம்.
தெரியாத தகவல்....அப்புறம்...ஏனுங்க...போயிருக்கலாமே ஷூட்டிங் பார்க்க...
ReplyDeleteஆசைதான் .. சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
Deleteஇந்த வோர்ட் வேர்பிகேசன் நீக்கினால் வசதி யாக இருக்கும்
ReplyDeleteஎதை சொல்லுறிங்க ? புரியலையே?
Deleteசமீபத்தில் செந்திலோடு பேசும்போது இன்னும் உன் சினிமாக்கனவு குறையவில்லையென அறிந்தேன். தற்செயலாய் இந்தப் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது, உன்னோடு கல்லூரியில் பேசிக்கொண்டிருந்தது போல் தோன்றியது.
ReplyDelete-அசன்
அசன்... உன்னுடைய பின்னூட்டம் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். ஆம்.. சில கனவுகள் கலைவதில்லை,இன்னும் கண்டுகொண்டிருக்கிறேன்..!!
Delete